பக்கம்:தரும தீபிகை 1.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. க. வி ஞர். 271

' கவிஞர் சுதந்த மான தேவர்கள் '

என மேல்நாட்டு அறி ஞரும் கூறியுள்ளனர். கிலைமை மிகவே கலைமையாயினர்.

கவிகளை எந்த நாடுகளும் சொந்த உரிமையுடன் மேன்மை யாகப் போற்றி வந்திருக்கின்றன. அரிய பொருள்களைக்காட்டி இனிய அறிவு கலங்களை ஊட்டிப் பெரிய உதவிகளைப்புரிந்தருள் கின்ற கவிஞரை உரிய தெய்வங்களாகப் பாராட்டி வருவது நாட்டுக்கு உயர்ந்த நன்மையாம். பாட்டாளால் நாட்டாண்மை

ஆகின்றது.

313. வானும் கிலனும் மலேயும் மறிகடலும்

கானும் புயலும் கதிர்மதியும்-ஞானவிழி கொண்ட கவிமுன் குடியடிமை செய்யுமே கண்டவழி எங்கும் கனிந்து. H. " (உ)

இ-ள். விண் மண் மலை கடல் வனம் மேகம் கதிர் மதி முதலிய யாவும் ஞான நோக்குடைய கவிஞன் முன் குடி அடிமைகள் போல் இனிது கொழில் செய்கின்றன என்றவாறு.

அகிலமும் கவிஞர்க்குக் கனியுரிமையான உடைமைகளே. எல்லாவற்றிற்கும் பாண்டும் என்றும் அவரே தலைமை அதிபதி களாய்த் தழைத்து இயலுரிமைகளை நிலை நிறுத்துகின்றனர்.

ஞான விழி கொண்ட என்றது காலதேச வர்த்தமானங்கள் யாவும் கடந்த மூல நிலைகளை ஒர்ந்து ஞாலம் தெளிவுற அறி வொளியை நல்கும் அவரது பெருமிக நிலை கருதி. யாரும்காணுத அரிய மறைகள் அவர் கண்டு காட்டுகின்றனர். அக் காட்சி அதிசய அழகாய் ஆனங்கம் பயந்து வருகின்றது. ==

தான் அசையாது கின்று கடவுள் அகிலமும் படைத்தல் போல் கவியும் எவையும் படைக்கின்ருன்.

அவனது சங்கற்பம்போல் இவனது கற்பனையும் அற்புத கிலையில் தொழில் புரிகின்றது. அவன் சிருட்டிப் பொருள்கள் யாவும் இவன் சிருட்டிக்கு ஆவலோடு ஏவல் .செய்கின்றன. கவி சிருட்டி உணர்வொளி பாந்து இயல்மணம் கமழ்ந்து உவகை கிலை யமாய்ச் சுவை சாத்து மிளிர்கின்றது.

புலவன் கருதியபடியெல்லாம் உலகப் பொருள்கள் உருகி உருவாகின்றன. வானம் கிலம் மலை முதலியன புலமைக்காட்சியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/278&oldid=1324855" இலிருந்து மீள்விக்கப்பட்டது