பக்கம்:தரும தீபிகை 1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 த ரு ம தீ பி. கை.

படிந்த பொழுது அதிசய அழகுகள் மலிந்து புதிய மாட்சிகளோடு பொலிந்து அவை மதிாலம் கனிந்து விளங்குகின்றன.

அங்கொளி விசும்பில் தோன்றி

அந்திவான் அகட்டுக் கொண்ட திங்களங் குழவி பால்வாய்த்

தீங்கதிர் முறுவல் நோக்கித் தங்கொளி விரிந்த ஆம்பல்

தாமரை குவிந்த ஆங்கே எங்குளர் உலகுக்கு எல்லாம்

ஒருவராய் இனிய ரோர் ?" (சூளாமணி) இது சக்திாவுதயம் குறித்தது. அந்திவானம் ஆகிய செவிலித் தாயின் ஒக்கலில் அமர்ந்துள்ள திங்களங்குழவியை நோக்கிக் குமுதமலர்கள் மலர்ந்தன; தாமரைகள் குவிந்தன. ஒன்று உவங் 'தது ; மற்று ஒன்று வருக்கியது. எவ்வளவு நல்லவாாயினும் எல்லார்க்கும் ஒருங்கே இனியாாய் ஒருவர்.இவ்வுலகில் உளாாகல் அரிது என்பதை இஃது உணர்த்தி கின்றது. கு ழ வி முறுவல் என்றது நிலவை. அமுத கிாணங்களையுடைய இனிய மதியை உருவகித்து வந்திருக்கும் இதில் அரிய மதிநலம் பெருகியுள்ளது. உரிய அழகினை ஊன்றி நோக்கி உறுதி நலனை உணர்ந்து கொள்க.

சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருங் இன்று மேல் அலார் செல்வமே போல்தலே கிறுவித் தேர்ந்த நூல் கல்விசேர் மாங்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. (சிந்தாமணி) நெல்லின் பயிர் பசுமையாய் வளர்ந்து பொதிவாங்கிக் கதிர் முதிர்ந்து காய்த்த நிலைமையை இது காட்டியுள்ளது. சொல் = நெல். இதில் குறித்திருக்கும் உணர்ச்சி நலங்களை ஒர்ந்து கொள்க. அற்பச் செல்வாது கிலைமையையும், நல்ல கல்வி மான் களது தலைமையையும் விளக்கிப் பணிவும் பண்பும் உடையய்ை மனிதன் உயர்ந்து கொள்ளும்படி இங்ானம் உணர்த்தி யுள்ளார்.

தலையும் ஆகமும் தாளும் தழஇே அதன் கிலேரிலா திறை கின்றது போலவே மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் விலையின் மாதரை ஒத்ததல் வெள்ளமே. (இராமாயணம்) மழை பெய்த பொழுது மலையிலிருந்து வெள்ளம் பெருகி ஒடியதை உள்ளம் தெரிய உணர்த்தியது. மலை அனைய கல்லவளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/279&oldid=1324856" இலிருந்து மீள்விக்கப்பட்டது