பக்கம்:தரும தீபிகை 1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. புல்லிய எல்லாப் பிறப்பும் புறந்தள்ளி

நல்ல பிறப்பிது கண்ணியுள்ளாய்-ஒல்லையினி என்றும் பிறவா இயல்பை இனிதாய்ந்து கின்று புரிக கிலேத்து. - (எ)

இ-ள் இழி பிறவிகள் யாவும் கடந்து உயர் பிறவியை அடைந் துள்ள நீ இனி உயர்வற உயர்ந்த பேரின்ப நிலையை உடனே பெறுக; பெருது கின்ருல் பேரிழவாம் என்க.

புல்லிய என்றது புழு பறவை மிருகம் முதலிய உடம்புகளே. புறம் தள்ளி என்றது அவற்றைக் கடந்து வந்துள்ள கதி நிலை தெரிய. புன்மை யாவும் நீங்கி நன்மை படைதற்கு மனிதப் பிற வியே தனியுரிமை யுடையது ஆதலால் 'நல்ல பிறப்பு' என வந்தது. இப் பிறவியால் பெறத்தகுவதை விரைவாகப் பெற்றுக் கொள்க. பிறந்த பேறு பிறவி தீர்த்து பேரின்பம் பெறுவதேயாம்.


18. பெற்ற பிறப்பால் பெறலரும் பேரின்பம்

பற்ற முயலும் பயனுடையார்-மற்றுமோர் புன்பிறப்பில் ஆழ்த்தும் புலேகிலேயில் போராடித் துன்படைய கில்லார் தொடர்ந்து. (அ)

பெற்றுள்ள இப் பிறவியால் பெறுதற்குரிய பேரின்ப நிலை யை நேரே பெறுகின்ற பேரறிவுடையவர் வேறே சிறு வழி களில் திரிந்து சீரழியார் என்றவாறு.

புலை நிலை என்றது. பழி பாவங்கள் விளையும் இழி நெறிகளை. பயனுடையார் என்றது. உடம்பின் பயனை உடன் அடைய முயலும் சயனுடைமை கருதி. நல்ல மனிதப் பிறப்பை அடைக் தவர் தமக்குரிய உறுதி நலனைக் காலமுள்ள பொழுதே கருதிக் கொள்ள வேண்டும். கொள்ளாதொழியின் பொல்லாத் துயரங் களுக்கு ஆளாய்ப் புல்லிய பிறப்பில் ஆழ்ந்து புலையாடிப் போவர்; அங்ஙனம் ஈனமா யிழிந்து போகாமல் ஞானமாய் உயர்ந்து செல்லுக. உரிமை யுறுபவர் பெருமை பெறுகின்ருர்,

கங்கங்கங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/28&oldid=1324596" இலிருந்து மீள்விக்கப்பட்டது