பக்கம்:தரும தீபிகை 1.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 த ரும தீ பி கை .

உணவில் ஆறு சுவைகளே அமைத்தன. உணர்வு நலம் ஒன்பது சுவைகளை யுடையது அக்க விழுமிய இாசனைகள் உயி ரினங்களுக்கு என்றும் இன்பம் புரிந்தருள்கின்றன

' கருணை வீரம் காமம் நகையே

அச்சம் வெகுளி இழிப்பு வியப்பு அமைதி, என அறிவுச் சுவை இங்ானம் ஒன்பது வகையாகப் பாவி யிருக்கிறது. வடமொழியில் இவை நவரசம் என வழங்கப்படு' கிறன. இந்தச் சுவை நிலைகளைத் தனித்தனியே உணர்த்தப் புகின் மிகவும் விரியும். தகவறிந்து தெளிக.

நாவின் சுவையினும் ப ா வி ன் சுவை பண்பாடுடையது.

தேவியல்பமைந்தது; பயனறிந்து நகர்ந்து நயனுயர்ந்து கொள்க.

==

217. மலர்தோறும் சென்று மது நுகர்வண் டென்னப் o பலநூலும் ஆய்ந்து பயன்கொண்-டுலகமெலாம்

இன்பமுற கன்பொருளே இன்புலவர் ஈந்தருளித் துன்பமறச் செய்வர் தொடர்ந்து. (எ)

இ-ள். பூக்கள் தோறும் பறந்து சென்று தேனேக் கவர்ந்துகொண்டு வந்து தொகுக்கும் வண்டுகளைப்போல் பல நூல்களையும் ஆராய் ந்து இனிய உணர்வு கலங்களை உலகம் இன்பமுறப் புலவர்கள் உதவியருள்வர் என்றவாறு.

இது, கவிகள் சுவைகளை உதவியருளும் இயல்புகூறுகின்றது.

மலர், நூல்களுக்கும் ; மது, இனிய மதி கலங்களுக்கும்; வண்டு, கவிஞர்க்கும் நுகர்வு ஆராய்வுக்கும் ஒப்பாம்.

பலவகையான மலர்கள் தோறும் வண்டுகள் பறந்து அமர் ந்து மதுவை நுகர்ந்து கொண்டுவந்து அடையில்சேர்த்துவைத்து உலகிற்கு உதவி வருகின்றன ; கவிஞர் பல். வேறு வகைப்பட்ட நூல்களையும் ஆராய்ந்து தெளிந்து அரிய இனிய கருத்துக்களை மன்பதைக்கு இன்பமாக ஈக் கருளுகின்ருர் ; ஆகவே அவை இவர்க்கு உவமையாய் வந்தன.

உவமக் குறிப்பால் கவிகளுடைய அறிவு நகர்ச்சியும் பிறவி

இயற்கையும் அறியலாகும். மது அருள் வண்டு என மதி அருள் கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/285&oldid=1324862" இலிருந்து மீள்விக்கப்பட்டது