பக்கம்:தரும தீபிகை 1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கவிஞர் . 28L

சுக்க கவி என்றது பொருள் நலமும் பொலிவும் உடைய தாய்க் கருதுக்கோமம் உள்ளக்கைப் பண்படுத்தி உயர் நலம் அருள்வகை சுகவும் சுவையும் உவகைகளாய் ஒளிர்கின்றன.

தகுதியில்லாத கவிகளை எவ்வளவு மிகுதியாகச் செய்தாலும் அவை உண்மையான கவிகளாகக் கருதப்படா.

செய்யுள் செய்யும் இயல்பு தெய்விகம் உடையது ; கருவிலே திருவுறுதல்போல் பிறவியிலேயே தனியுரிமையாய் மருவி வக் கால் ஒழிய அது உயர்வாக ஒளி செய்யாது.ஆதலால் அங்கிலைமை தெளிய இயற்றும் தன்மை என வந்தது.

“The poet is born, not made கவித்வம் பிறப்பில் அமைந்தது; முயன்று பெறுவது அன்று. ’’ என ஆங்கில நாட்டிலும் இத்தகைய பழமொழி வழங்கி வருகின்றது. ஆகவே கவிஞனது, பிறப்பின் அருமையும் பெருமையும் அறியலாகும். சுவை கிறைந்த உயர்ந்த கவிகளைச் செய்தருளும் கவிஞாே சிறந்து விளங்குகின்ருர் , அங்ானம் செய்யமாட்டாதவர் விளக்க மின்றி மறைந்து போகின்ருர்

அரிய பெரிய செல்வங்களை யுடையணுயினும் பிள்ளைப் பேறு இலஞயின் அவன் பெருமைகுன்றி மறைகின்ருன் பலகலைகளை யும் பயின்று தலைமையான புலமை எய்தி யிருந்தாலும் செய்யுள் செய்யும் கிலைமை இலனேல் அப்புலவன் பொலிவிழந்து போகின் முன். கிலைத்த புகழின்றி கிலைகுலைந்து போதலால் மகவில்லாத வாழ்வு கவி இல்லாகவனுக்கு உவமையாய் வந்தது.

குடி விளக்கிக் குலமாபு துலக்கி வழிவழி யே புகழ்பெருக்கி வரும் குலமக்கள் போல் கலைமக்களை என்றும் தலைமக்களாக்கிக் கவிகள் கவின் செய்து வருகின்றன. -

பிள்ளை இல்லான் பேர் அழிகின்ருன் , கவி இல்லான் சீர் அழிகின்ருன். சீர்மையின் ர்ேமை சித்திக்கத்தக்கது.

இனிய கவிகளை ஈன்றருளினவர் கம்பர் வள்ளுவாைப்போல் என்றும் தனி மகிமை யுடையாாய்ப் புனித நிலையில் பொலிந்து விளங்குகின்ருர். பொலிவு போதம் கனிந்து மிளிர்கின்றது.

புவி சிருட்டி செய்யும் பிாமன் தேவர்களுள் தலைமை எய்தி கிற்றல்போல் கவி சிருட்டி செய்யும் கவிஞன் புலவர்களுள் கலை சிறந்து திகழ்கின்ருன். அரிய செயல் பெரிய புகழ் ஆகின்றது.

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/288&oldid=1324865" இலிருந்து மீள்விக்கப்பட்டது