பக்கம்:தரும தீபிகை 1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 த ரும தீ பி. கை

19. ரிேல் குமிழியென நேரழியும் என்றுடலை

ஓரின் உளபோதே உய்யாமல்-பாரில் பழுதே பகலேப் பழியாக் கழித்தார் அழுதே விழுவர் அளறு. (கூ)

இ-ள் இவ் வுடல் நீர்மேல் குமிழி போல் விரைவில் அழியும்; அங் நிலைமையை உய்த்துணர்ந்து உடனே நல்ல பயனே அடைக, அடையாதொழிந்தவர் கடையாய் இழிந்து கதறிஅழுவார் என்க.

உடலைக் குமிழி என்றது தோற்றக் கேடுகளின் தொடர்பு நோக்கி. மண்மேல் தோன்றி மடிவதற்கு நீர்மேல் எழுந்து ஒழிவது ני வமையாய் வந்தது. கண் எ திரே கடிது மறைவதற்குக் காட்சி ஒன்றைச் சாட்சி எடுத்துக் காட்டிய படியிது.

"நீரில் குமிழிஎன நீள்வானில் மின்என்னப் பாரில் உடலழியும் பார்.”

என்றபடியே நாளும் பார்த்து வருகிருேம். வந்தும் பலன் ஒன்றும் பாராமல் பழுகே கழிகின்ருேம். இக் கழிவு எவ்வளவு அழிவினை யுடையது! ஆய்ந்து சிந்திக்கவேண்டும். நல்ல பகலை நாசமாக்காமல் ஒல்லையில் உயிர்க்கு உறுதிசெய்துகொள்ளுக; இல்லையேல், எல்லையில் காலம் அல்லலில் அழுந்த நேரும் என்க. அளறு= நரகம். பகலேப் பழுதே கழித்தவர் பின்பு அழுதே விழு வர் ஆகலான் அவ்வாறு கழிந்திழியாதுஉயர்ந்தெழுக என்பதாம்.

=

30. பேராது கின்ற பிறவிப் பெருங்கடலே

நேராக் கடக்கும் நெடுங்கலமாச்-சீராகப் பெற்ற உடலிதால் பேரின்ப முத்திகிலே உற்றவரே உய்ந்தார் உடன். (ιδ)

இ-ள்.

பெரிய பிறவிக்கடலைக் கடத்தற்கு உரிய கலமாய் இவ்வு

டல் அமைந்துள்ளது; இதல்ை பேரின்ப நிலையமான முத்தித்

தலத்தை அடைந்தவரே என்றும் கித்திய முத்தராப் நிலைபேற

டைந்து தலைமையாய் உயர்ந்தார் என்றவாறு.

+.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/29&oldid=1324597" இலிருந்து மீள்விக்கப்பட்டது