பக்கம்:தரும தீபிகை 1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284. த ரு ம தீ பி. கை.

  • கற்பகம் அனைய அக்கவிஞர் ' எனக் கவிச் சக்கரவர்த்தி யாகிய கம்பர் சுட்டியிருக்கும் நுட்பம் நூனித்து நோக்கத்தக்கது.

இங்ங்னம் இனிய கவிகளை இயற்றும் புலவரே தனி மகிமை பெறுகின்ருர். பால் இல்லாத மலட்டுப் பசுவைப்போல் நால் இல்லாத புலவனையும் உலகம் விழைந்து பேணுமில் விலகிப்போ கின்றது. கற்றதை உணர விரித்து உரையாதார் மணம் இல்லாத மலர்போல்வார் எனத் தேவர் கூறியதும் ஒரளவுஈண்டு உரிமையா கின்றது. பிறர்க்குப் பயன்படும் அளவே ஒருவன் பெருமை அடைகின்ருன்.

உயர்ந்த காவியங்கள் உலகிற்கு என்றும் உணர்வு கலங்களை உதவி வருதலால் அந்நூல்களைச் செய்தருளினவர் தெய்வீக நிலை யில் சிறந்து திகழ்கின்ருர்.

230. ஆய்ந்து தெளிந்த அறிஞர் தமதுள்ளே

தோய்ந்துலகம் இன்பமுறச் சொல்லுவார்-சாய்ந்துகின்று

சோரப் புலவரயல் சொன்னதையே பன்னிவசை கூரப் புகல்வர் குறி. -- (10)

- இ. ள். ஆராய்ந்து தெளிக்க அரிய புலவர் கம் அகத்தே கூர்ந்து நோக்கி அனுபவமாய் ஒர்ந்து உணர்ந்த உண்மைகளையே உலகம் நன்மையுற இனிமையாக உவந்து சொல்லுவர் ; புன்மையான சோாப்புலவர் பிறருடைய கருத்துக்களைக் கள்ளமாகக் கவர்ந்து எள்ளலுடன் சொல்லி இழிந்து கிற் பர் என்றவாறு.

இது புலமைச் சோாக்கின் புலைம்ை கூறுகின்றது. தனது மதி கலக்கைப் பண்படுத்திக் கானக ஆராய்ந்து சொல்வதே மேன்மையாம்; அங்ாவன மின்றிப் பிறர் கருதியுரைத்த கருத்துக்களையே காவாக எடுக்து மறைவாக வெளியிடுதல் மிகவும் கீழ்மையாம். ஆவகை அறியாமல் போவது புலை.

தன் சொந்த அறிவிலிருந்து வருவது இனிய ஊற்றில் ஊறும் நீர்போல் இன்பம் பயக்கும்; அயலாருடையதை மயலாக அள்ளிக் கொள்வது இட்டு வைத்த கட்டுக்கடை ாோய் ஒட்டி ஒழியும்.

முன்னேர் நூல்களையும் மேலோர் எண்ணங்களை பும் சால் பாக ஆராய்ந்து நேர்மையுடன் கானகவே நூல் செய்யவேண்டும்;

அதுவே சீர்மையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/291&oldid=1324868" இலிருந்து மீள்விக்கப்பட்டது