பக்கம்:தரும தீபிகை 1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உடல் நிலை 23

இம் மனித உடம்பு பெற்றதற்குப் பயன் துன்பத்தொடர்பு ங்ேகி இன்பப் பேறடைதலே யாம். ஆகவே அவ்வுயர் பயனை அயராது உடனே பெறுக. அதுவே பெரும் பாக்கியமாம்.

உற்றவரே உய்ந்தார் என்ற கல்ை மற்றவர் உய்வின்றி வெய்யதுயரில் வீழ்ந்து உழல்வார் என்பது பெறப்பட்டது. பயனை இழந்து பாழ்படுவது பரிதாபமாம்.

அறிவு நலங்கனிந்த இவ்வுயரிய உடலாலன்றி வேறு வகை யில் பிறவியை நீக்கி உயிர் உப்தி காண முடியாது; அவ் வுண்

மையை உவமைக் குறிப்பால் உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

உயிர்க்கு உறுதித் துணையாய், முடிவிலின் பத்திற்கு மூல காரணமாய் இம்மனித வுடம்பு இனிகமைந்துள்ளது; இது கொண்டு செய்வன செய்து விரைந்து உய்ய வேண்டும் என்க.

கடலினை எளிது ந்ேதிக் கடத்தற்குக் கலம்போல் இந்த உடலின அடைந்துளாய் நீ உற்ற இத் துனேயினலே அடலுறு பிறவி நீங்கி ஆனந்தம் அடையா யாயின்

மடமையா யிழிந்து துன்ப வாரியில் வீழ்ந்தாயந்தோ!

இந்த உண்மையை உணர்ந்து உய்தி பெறுக.

o இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மனித உடம்பு ஆன்மாவுக்குப் புனித நிலையம். அது பெறலரும் பேருகப் பேர்பெற்றுள்ளது. அஃது எளிதே அழியும் இயல்பினது. அது பழுது படாமுன் பயனடைய வேண்டும். அதன் நிலைமை தெரிவது தலைமை அறிவாம். அறியா தொழியின் அவலம் ஆகும். பிறவாநிலையை அகல்ை பெறலாம். அதன் பயனை யடைந்தவர் உயர்ந்து விளங்குவர். பழுதே கழித்தவர் அழுதே அயர்வர். அகன் அருமை கெரித்து உரிமை செய்து கொ ள்க.

இரண்டாவது உடல்நிலை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/30&oldid=1324598" இலிருந்து மீள்விக்கப்பட்டது