பக்கம்:தரும தீபிகை 1.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 த ரும தீ பி ைக.

224. பொய்யும் களவும் புனேங்து வரும்பொருள்தான்

மெய்யும் அருளும் மிகமேவிச்-செய்ய ஒருங்லேயில் நிற்கின்ற ஒண்புலவர்க் கெங்கன் பெருநிலையில் சேருமோ பேசு. (+)

இ-ள். I

பொய் களவு முதலிய வஞ்சவினைகளால் பெருகி வருகின்ற பொருள் நெஞ்சம் தூய புலவர்களிடம் கிறையச்சேருகல் அரிது; சேர்மானத்தின் தீர்மானம் தெரிக என்றவாறு.

இது, கல்வியாளாது செல்வ நிலையை உாைக்கின்றது.

கற்றவரிடம் வறுமை பெருமை தருகின்றது ; அதனல் உலகம் பயன் உறுகின்றது என மேலே கண்டோம்; பொருள் அவர் பால் பெருகி வாாமல் அருகி கிற்றற்கு நோான காானத் தை இதில் நேரே காண வந்திருக்கின்ருேம்.

உலக நிலையில் வெளியே பறந்து திரியும் தொழில் முயற்சி களிலே தான் பொருள் விளைவுகள் பொருங்கி யிருக்கின்றன.

உழவு வாணிகம் கைத்தொழில் முதலிய செல்வத்துறைகளை யெல்லாம் அறவே கைவிட்டுக் கல்வித்துறை ஒன்றிலேயே கண் அனும் கருத்துமாய்ப் புலவர் எண்ணுான்றி நிற்கின்றனர் ; ஆகவே அவர்க்குப் பொருள் வாவு பொருங்காது போகின்றது.

பொருள் புறத்தே விாைந்து அலைந்து விழைந்து கேடும் கிலையது ; அறிவு அகத்தே அமர்த்திருந்து நுழைந்து நாடும் ககையது. அது வஞ்சம் குதுகளால் வருவது; இது கெஞ்சம் தாய் மையால் கிறைவது. அது வன்கண்மையில் வளர்ந்து குவிவ க ; இது மென்கண்மையில் எழுந்த பொலிவது.

இங்ஙனம் மாருன மருள் நிலையில் மருவி கிற்கும் பொருள் அருள் நிலையில் துருவியுள்ள புலவரிடம் அணுகாமல் அகல நேர்ந்தது.

உலக போகங்களுக்கெல்லாம் பொருள் மூலகாரணமாயுள்ள மையால் அதனை எவ்வழியும் எப்படியும் யாது செய்தாயினும் தேடிச் சேர்க்க வேண்டும் என்னும் போாவல் மனிதரை நன்கு பிணிக் கிருக்கின்றது. அக்க ஆசையால் எக்க கிங்கனையையும் பொருள் செய்யாமல் பொருளையே பொருளாக நாடி மருள்

மீதுார்ந்து ஒடி மக்கள் மால் கொண்டு உழல்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/301&oldid=1324878" இலிருந்து மீள்விக்கப்பட்டது