பக்கம்:தரும தீபிகை 1.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. புலவர் நிலை. 297

எள் என்னும் முன்னம் எண்ணெயா அளந்தது என்றது இன்று வேண்டும் என்று வாய் கிறந்து சொல்லும் முன்னரே

பலவும் வாரிக் கொடுத்த அந் நிலைமை கருதி.

சேர மன்னனிடம் ஒளவையார் ஒரு முறை சென்றிருந்த போது ஈன்ற ஆடு ஒன்று வேண்டும் என்று குறிப்பித்தார். உடனே அவ் வேந்தன் உவந்து தங்கத்தால் ஒரு ஆடு செய்து தந்தான். அவனது பெருந்தகைமையை வியந்து அப் பாட்டி புகழ்ந்து பாடிய பாட்டு அடியில் வருவது.

சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னேச் சுரப்பாடு யான்கேட்கப் பொன் ஆடு ஒன்று ஈங்தான் இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர் தாமறிவார் தம்கொடையின் சீர். ' (ஒளவையார்) நசஞ்சில் வள்ளுவன் என்னும் குறு கில மன்னன் தன்பால் அரிசி வேண்டி வந்த எளிய பாவலர்க்கு மலைபோல் ஒரு பெரிய யானையைக் கொடுத்தான். அவன் கொடையையும் ஒளவைப் பாட்டி உவந்து பாாாட்டி யுள்ளாள்.

தடவுகிலேப் பலவின் காஞ்சில் பொருநன் மடவன் மன்ற செங்காப் புலவீர்! வளேக்கை விறலியர் பட்ப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாம் சில அரிசி வேண்டினேம் ஆகத் தான் பிற வரிசை அறிதலின் தன்னும் தாக்கி இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னது ஒர் பெருங்களிறு கல்கியோனே! அன்னதோர் தேற்ரு ஈகையும் உளதுகொல்? - - - போற்ருர் அம்ம பெரியோர்தம் கடனே. " (புறம், 140) இந்தப் பாட்டைக் கொஞ்சம் கவனித்து நோக்கின் பழங் காலப் பண்புகளை உளங் காணலாகும். மடவன் என்றது கொடை மடம் கொண்டுள்ள அவனது குணநலம் தெரிய வந்தது. இரும் கடறு வளைஇய=பெரிய காடு சூழ்ந்த. குன்றம் என்றது யானையின் உருவப் பொலிவும் பெருமிதமும் காண.

தம்கிலைமையை உணராமல் அள்ளிக்கொடுக்கும் வள்ளல்களை

உல்லாசமாய் எள்ளி உரையாடி வருதலால் இவரது உள்ளப்

38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/304&oldid=1324881" இலிருந்து மீள்விக்கப்பட்டது