பக்கம்:தரும தீபிகை 1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்ருவது அதிகாரம் ப. சி.

அஃதாவது பசியினது கன்மை. குடலிடை யுறைந்து உடல் உயிர்களை இயக்கி உலகை நடாத்தி வருகின்றது ஆகலான் அவ் வுறவுரிமை புணர உடல் நிலையின் பின் இது வைக்கப்பட்டது.

21. ஊனுயிர்கட் கெல்லாம் உறுபசியே உள்ளுயிராய்த்

தானமைந்து நின்று தனியியக்கி-ஆனதொழில் எல்லாம் புரிய இயற்றி இயங்குமே வல்லான் உருவாகி வந்து. (க)

இ-ள் பசி உயிரினங்களுக்கு ஆதாரமாய் நின்று இறைவன்

போல அவற்றை யாண்டும் ஆட்டி அருள்கின்றது என்றவாறு. உ ) பசி=உயிர்க்கு உறுதியாக உற்ற பசி. உயிர் உடல் உற்ற பொழுதே பசியும் உடனுற்றது ஆகலான் உறு பசி என வந்தது. பிள்ளை பிறந்தவுடனே அழச்செய்வது அதன் உள்ளுறை பசியே. அங்ங்னம் அழுகின்ற அளவைப் பொறுத்தே அதனு டைய ஆயுள் நீட்சி அளக்கப் பட்டுள்ளது. பிறந்த பொழுது குழந்தை வாய் திறந்த அழவில்லையானல், ஆது விரைந்து இறந்து போகற்கு அறிகுறி என்ப. எனவே பசியின் பான்பை பசுங் குழவிபால் இங்கனம் அறிய வந்தது.

சிவ கோடிகள் யாவும் அலேந்து திரிந்து பறந்து தொழில் புரிதற்குக் காரணம் பசியேயாம்; அது இல்லையாயின் அவை யாதும் செயலற்றிருக்கும் ஆகலான் எல்லாம் புரிய இயற்றி” என அதன் வல்லாண்மை கூற நின்றது.

வல்லான் என்றது கடவுளை: எல்லாம் செய்ய வல்லன் ஆக லால் இச் சொல்லால் சுட்ட நின்ருன். பசியை வல்லான் ஒடு ஒப்பவைத்தது உயிர்களை இயக்கி உலகை நடத்தி வருதல் கருதி.

Ա-b வண்ணம் பூவின் மனம்போல் உலகுயிர்கள் எங்கனும் 凸_庾 ங் து ரி1 ல்லாவற்றையும் இயக்கியருளும் திவண்ணன் எனக் திவண்ணமான பசியும் சீவர்களை இயக்கி யுள்ளது என்க.

தெய்வத் தன்மையுடைய இத் தகைய பசியை உய்வைத் தரும்படி உணர்ந்து போற்றி ஒழுக வேண்டும் என்பது கருத்து.

இகளுல் பசியின் பெருமை கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/31&oldid=1324599" இலிருந்து மீள்விக்கப்பட்டது