பக்கம்:தரும தீபிகை 1.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 த ரும தீ பி. கை.

தமிழருமை,அறியாத உலோபிகளிடம்போய்ப் பாடல்களைப்

பாடிப் புலவர்கள் சீரழிந்து வருக்தி யுள்ள சிலைமைகள் இவ்வாறு பல உள்ளன. விரிவஞ்சி ஈண்டு ஒதுக்க நேர்ந்தன.

மேலே வந்துள்ள குறிப்புக்களால் பின்குளில் இக் நாட்டு மக்கள் கலைச் சுவை யிழந்து புலப்பட்டுள்ள மடமையும், அப் புல்லர்பால் அலைந்து அவமானம் அடைந்து கலைவாணர் அலமந்திருக்கும் கொடுமையும் அறிந்து கொள்ளலாம்.

நாட்டு கிலை இங்ானம் தலை மாறிப் போனமையால் பரிசில் வாழ்க்கை பரிதாபம் என வந்தது. +.

கயம் தெரியா மாக்கள் இடைச் செல்லல் இழிவு அன்ருே தெளி' என்றது அவ்வழியை விட்டு விலகி உரிய ஒரு தொழிலைக் கைக் கொண்டு வாழுக எனப் பரிவுடன் வேண்டிய படியிது.

F

238. மெய்ப்பொருளாம் கல்வியுளம் மேவியுள்ளோர் மெய்ம்மறந்து 'பொய்ப்பொருளே காடிப் புலேயாடி-எய்ப்புடைய

செல்வரிடைச் செல்லல் திறல்வீரன் பேடியிடம் பல்லிளித்து கின்ற படி, )ك {

இ. ள். என்றும் அழியாத மெய்ப் பொருளாகிய கல்வியைப் பெற் மறுள்ளவர் பொன்றி ஒழியும் பொய்ப் பொருளை நாடிப் புல்லிய செல்வரிடம் போதல் நல்ல உயர்க்க சுத்த வீான் இழிந்த பேடி யிடம் போய்ப் பல்இளித்து கின்றது போல்வதோர் பரிதாபமாம்.

இது புலவர் நிலைமையின் தலைமை கூறுகின்றது. கல்வியை மெய்ப்பொருள் என்றது கித்தியமாய் கிலைத்து கிற்றல் கருதி. உயிர் புக்குழி எல்லாம் புகுந்து உணர்வு மயமாய பாண்டும் உயிர்க்கு உறுதி புரிந்து வருதலால் கல்வி அழியாச் செல்வமாய் வழிபாடு செய்ய வந்தது.

கேடில் விழுச் செல்வம் கல்வி' என்ற தேவர் வாக்கையும் நோக்கி அதன் பான்மை மேன்மைகளை உணர்ந்து கொள்க.

இத்தகைய விழுமிய தெய்வத்திருவுடையார் தம்கிலைமையை உண்மையாக உணாாமையால் புன்மையாளரிடம் போய்ப் புலை

யாய் இழிந்து வறிதே உழல நேர்கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/313&oldid=1324890" இலிருந்து மீள்விக்கப்பட்டது