பக்கம்:தரும தீபிகை 1.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. புலவர் நிலை. 307

செல்வர் என்றது அறிவு கலங் குன்றி வறிது نهامهبتت به செருக்கி நிற்பாாை. எய்ப்பு=மெலிவு, தேய்வு. உணர்வு கலங் கண்டு உவந்து உபசரிக்கும் தகுதியில்லாத புல்லரிடம் நல்ல கல்விமான்கள் செல்லலாகாது. சென்ருல் அல்லலும்அவமதிப்பும் இருவருக்கும் முறையே நேர்கின்றன.

  • அவிச்சுவையே அன்றி அறிவு நலமார்

கவிச்சுவையைக் கண்டு களியார்-செவிச்சுவையும்

கானர் புவிக்குக் கடுஞ்சுமையாய் கின்றுபலர் வினே கழிவர் விளிங்து '

என்ற படி வளர்க்கிருப்பவரிடம் கலைச்சுவையாளர் சென்ருல் அவர்க்குப் புலைச் சுவையாகின்றது; ஆகவே போனவர் மானம் மரியாதைகளை இழந்து மறுகி மீள்கின்ருர்,

நல்ல கல்விமான் புல்லிய செல்வரிடம் போய் ஒன்று வேண்டி இாந்து கிற்றல் கலைக்கும் நிலைக்கும் என்றும் ஈன மாம். அந்த இழி நிலையை விளக்க உவமானம் வந்தது.

திறல் விரன் பேடியிடம் பல் இளித்து கின்றபடி '

இருவகை நிலையும் ஒரு முகமாய்க் கெளிய இஃது உணர்த்தி கின்றது. புலவனே விான் எனக் குறி த்தது, பகை யகத்து அஞ்சாது புகுந்து அவன் அடலாண்மை புரிதல் போல் அவை யகத்துள் எஞ்சாமல் எதிர்ந்து இவன் மிடலாண்மை செய்து வருகல் கருதி.

கல்வி அறிவு அருக்கிறவினது ஆகலால் அதனைத் தலைமை யாகவுடைய புலவர் பெருந்திறலாளாாய்ப் பேச கின்ருர். வில்லே ருழவர் என விாரையும், சொல்லேருழவர் எனப் புலவரையும் சொல்வியுள்ளமையால் அவர்தம் செயலும் இயலும் அறியலாகும்.

.ே ார்முகம் புகுந்து எல்லாரையும் வெல்ல வல்ல விான் ஒரு புல்லிய கோழை எதிரே பல்லிளித்து நிற்பன யாண்டும் கில்லான்; அங்ஙனம் கிற்கக் காணின் அது எவ்வளவு மாயவியப் பேர் அவ்வளவு அதிசயமாம் கல்விமான் புல்லரிடம் புகுந்து கிற்றல். அப் புலைநிலையை ஒழித்துக் கலை ஈலம் காணுக.

தம் ர்ேமை சிதையாமல் சீர்மை குலையாமல் புலவர்கள் யாண்டும் கலைமையாக வாழ வேண்டும்; அங்கனம் வாழின்

உலகமும் நலமாய் ஒளி செய்து கிலவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/314&oldid=1324891" இலிருந்து மீள்விக்கப்பட்டது