பக்கம்:தரும தீபிகை 1.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 த ரும தீபிகை.

ஏட்டைக்கட்டி எழுத்தோடு எழுத்தை வைத்து இணைத்துக்கட்டி இசைகட்டி லோபர்டிேல் பாட்டைக் கட்டிஎன் தொண்டையும் கட்டிய பாவம் தானினி என்றைக்குத் தீருமோ? கோட்டைக் கட்டும் குழலே! நின தடித்

துணையைக் கட்டிய பேர்க்குப் பரகதி வீட்டைக் கட்டிய தாயே சவுந்தர

மீனவன் பங்கின் மீட்ைசி அம்மையே!”

= (பொன்னம்பலக் கவிராயர்) புன் பொருளுக்காகப் புல்லரிடம் போய் இப் புலவர்கள் பட்டிருக்கும் பாட்டை இப் பாட்டுகள் காட்டி கிற்கின்றன.

அவமாய் இவ்வாறு அல்லலுருமல் நவமாக நல்ல ஒரு தொழிலை நயந்து கொண்டு செல்வ நிலையில் சிறந்து வாழுக. கால நிலைக்கு ஏற்ப அறிவைப் பயன் படுத்துக என்பது கருத்து.

280. ஆழ்கடலுள் முத்தும் அடவிதனில் நன்மலரும் -

வீழ்நலங்கள் வீணய் விளிதல்போல்-கேழ்கிளரும் பாவலரும் அங்தோ பயனறியா மக்களிடை

மேவி மறைகின்ருர் மேல். (ώ)

ஆழமான கடல் உள்ளே நல்ல முத்துக்களும், பாழான காட்டிலே இனிய மலரும் பயன் இன்றி வினே கழித்து ஒழிதல் போல் புன்மையான மக்களிடையே புனிதமான புலவர்கள்

வறிதே இழிந்து மறைகின் ருர் என்ற வா.மு.

அரிய கலைகள் பயின்று இனிய கவிகள் இயற்றும் பெரிய கவிஞரே யாயினும் அருமை தெரியாத மனிதரிடையே படின் அவர் பெருமை யடையார்; அவரது அறிவொளி வெளியே ஒளி விசாமல் உள்ளேயே மழுங்கி உலந்து போகின்றது. -

விலை யுயர்ந்த நன்முக்கை அரசர் காணின், அதனே அவர் விழைந்து பெற்றத் தம் மணி முடியில் புனைந்து போற்றுவர்; மலை வேடர் அதன் கிலை கானது போவர். அதுபோல் கலை வாணரும் அறிவுடையார் குழுவில் உயர் மகிப்புடையாாய் கலம் மிகப் பெறன்ெருர்; அறிவிலிகளிடையே படின், ஒரு பயனுமின்றி அவமதிப்பாளராய் அவமே மறைகின்ருர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/317&oldid=1324894" இலிருந்து மீள்விக்கப்பட்டது