பக்கம்:தரும தீபிகை 1.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்து நான்காம் அதிக்ாாம்.

- கரும நலன். s

அஃதாவ்து தொழிலின் தன்மை. கல்வியறிவு அக நிலையில் ஒளி புரிதல் 3ւնոտ கரும நலன் புற கிலையில் வளம் தருகின்றது. உயிர்க்கு இனிய கலையுணர்வைப் பேணுவதோடு அமையாமல் உடலுக்குரிய தொழில் முயற்சியையும் செய்து கொள்ளவேண்டும் என உணர்த்துகின்றமையால் உலக வுயர்வின் உரிமை கருதிப் புலவர் கிலையின் பின் இது வைக்கப் பட்டது. 231. கரும வுலகில் கருமம் புரிந்தார்

இருமை நலனும் இனித்ா-உரிமையுடன்

பெற்று மகிழ்வார் பிறழின் பிழைமலிங்

திற்று விழுவார் இழித்து. (க)

இங்கே கருமங்களை உரிமையாகச் செய்தவர் இம்மை மறுமை என்னும் இருமை நலன்களும் எ ய்தி இன்பம் உறுவார்; செய்யாதவர் இழிந்து படுவார்; இவ்வுண்மையை ஊன்றி உணர்ந்து தொழில் புரிந்து உயர்க என்றவாறு.

இது கருமத்தின் பெருமை கூறுகின்றது.

கைத்தொழில், உழவு, வாணிகம் முதலிய செயல் வகைகள் எல்லாம் கருமம் என வந்தன. கருவி காணங்களால் கருதிச் செய்வது என்னும் காான நிலையால் அதன் பூான உருவம் புலனும். காரியங்களின் சீரிய கலனே அது காட்டியுள்ளது.

புண்ணியம் புரிந்தோர் எண்ணியபடியே யாதொரு உழைப்பு மின்றி இனிய இன்ப நலங்களே அனுபவிக்கும் கலத்திற்குப் போக பூமி என்று பெயர். கருமங்களைச் செய்த நல்ல இனங்கள் குழுமியுள்ளமையான் அது சுவர்க்கம் என கின்றது. சுவர்க்கம் என்னும் சொல்லுக்கு நல்ல வருக்கங்கள் கூடியிருப்பது என்பது பொருள். தரும கிலையமான அதன் எதிர் இது கரும கிலேயமாயது.

நாளும் முயன்று தொழில் புரிந்து தம் வாழ்நாளை மனிதர் இனிது கழிக்கும் இயல்பினே யுடைமையால் இங்கிலம் கரும غالمۓ( என வந்தது. எய்திய பெயரால் செய்தியை அறிகின்ருேம்.

莺0

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/320&oldid=1324897" இலிருந்து மீள்விக்கப்பட்டது