பக்கம்:தரும தீபிகை 1.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கரும நலன். 329

ஊக்கி முய்லாமல் உளம் மடிந்திருந்தால் பாக்கியங்கள் இலவாம்; பழி வறுமைகள் உளவாம்; ஆதலால் அவ்விழி கிலையை அறவே ஒழித்துத் தொழில் நலனேத் தொடர்ந்து செய்க.

வையத்தின் வாழ் வெல்லாம் செய்வினையிலேயே செறிக் திருக்கின்றன; அதனைச் செய்யாவழி உய்வினை இல்லை.

செய்யான் தொழிலெனின் செய்யாளும் யாதுமே ச்ெய்யாள்; கரியாளே சேருவாள்-ஐயோபின் இல்லாமை ஒன்ருே இடர்பலவும் ஏறுமே பொல்லாமை எல்லாம் புகும்.

தொழில் செய்யாவழி உளவாம் இழி துயரங்களை இதல்ை அறிந்துகொள்ளலாம். செய்யாள்=திருமகள். கரியாள்=மூதேவி. செய்யாள் இாண்டனுள் முன்னது பண்புப் பெயர்; பின்னது வினைப் பெயர். தொழிலாளி சீதேவியாய்ச் சிறந்து விளங்கு ன்ெருன் ; சோம்பேறி மூதேவியாய் இழிந்து கழிகின்ருன்.

கருத்துடன் முயன்று வாழாத வாழ்வு பாழாகின்றமையால் அவ் வாழ்வினர் தாழ்வினாாய்த் தளர்ந்து கொலைகின்ருர்,

“A purposeless life is a life of fatigue. ” (Hadfield) 'குறிக்கோளுடன் எண்ணி ஒழுகா வாழ்வு இழிவாழ்வாம்' என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. அறிவுடைய மனிதன் குறியுடன் கின்று தன் குடியை நெறியே உயர்த்தி கிலை கிறுத்து கின்ருன். அங் கிலைமை தலைமையாய் மிளிர்கின்றது.

எவ்வழியும் யாண்டும் கல்ல கருமங்களைச் செய்து செல்வ நலங்களை எய்திச் சிறந்த நிலைகளில் மக்கள் உயர்ந்து கொள்ள

வேண்டும் என்பது இதன் கிாண்ட பொருளாம்.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கருமம் பிறப்புரிமை யானது. அதனைச் செய்வதே உறுப்பின் பயனும், செய்யாதவர் சிறப்பு அழிகின்ருர். செய்தவர் சீர்பல பெறுகின் ருர். எல்லா இன்ப கலங்களையும் எய்தி மகிழ்கின்ருர். காலம் கருதிக் கருமம் செய்க. தக்க தொழில் மிக்க இன்பமாம். உரிய தொழிலில் பொருள் வளம் பெருகி வருகின்றது. தானுக முயன்று உயர்ந்தவன் மேன்மைமிகப்பெறுகின்ருன். திருவும் தேசும் உடையணுய் அவன் சிறந்து திகழ்கின்ருன்.

உச வது கரும நலன் முற்றிற்று.

• 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/336&oldid=1324913" இலிருந்து மீள்விக்கப்பட்டது