பக்கம்:தரும தீபிகை 1.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தைந்தாம் அதிகள்ாம். வாழ்க்கை நிலை. அஃதாவது குடி வாழ்க்கையின் கிலைமை. உலகில் தோன்றிய மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் இனிது வாழ ஒரு மனே வியை மணந்து கொள்ளுகின்ருன். அந்த இனி துனேவியுடன் அமர்ந்து மனே வாழ்க்கை புரியும் மாட்சியை இஃது உணர்த்து கின்றது. வாழ்க்கை நிலை கரும நலனுல் பெருமை அடைகின்ற மையின் அவ் வுரிமை கருதி அதன்பின் இது வைக்கப் பட்டது.

341. அன்பு கனிந்த அருமை மனைவியுடன்

இன்பு கனிய இனிதமர்ந்து-முன்பு குறித்த அறத்தைக் குறிக்கொண்டு பேணிச் செறித்த மனே வாழ்க்கை செய். (க)

- இ. ள். அன்பு கிறைந்த அருமை மனேவியுடன் அமர்ந்த தலைமை யான அறத்தை நாளும் குறிக் கொண்டு பேணி இனிய மனை வாழ்க்கையை இன்புறச் செய்க என்றவாது.

மனை வாழ்க்கையின் இன்ப கலங்களுக்கெல்லாம் மனைவியின் அன்புரிமையே மூல காணம் ஆதலால் அது முதலில் வந்தது. அந்த அன்பின் கனிவே எல்லா இன்பங்களையும் நன்கு கனியச் செய்து மனித வுலகத்தை இனிமைப்படுத்தி வருகின்றது. மனிதன் பெறத் தக்க பொருள்கள் எவற்றினும் மிகவும் அருமையான பொருள் இனிய மனைவியே ஆதலின் அத் தனி மகிமையை அடை உணர்த்தி கின்றது.

கணவனைப் பேணல், கற்பு நெறி கிற்றல், வாழ்க்கையை கடத்தல், வருபொருள் புரத்தல், அதிதிகளை ஆதரித்தல் முதலிய பண்பாடுகள் எல்லாம் நன்கு அமைந்த பாக்கியவதியை அடைக் தவன பெரிய பாக்கியவானுகின்ருன் நெறியுடைய மனைவி அரிய திருவாய் மருவி யுள்ளாள்.

    • House and riches are the inheritance of fathers; and a prudent wife is from the Lord.” “Solomon.” விடு மாடு முதலிய செல்வங்களை வழி முறையில் அடைய லாம்; அறிவுடைய மனைவி இறைவன் அருளால் கிடைக்கின்ருள்' என்னும் இப் பொருள் மொழி ஈண்டு எண்ணத் தக்கது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/337&oldid=1324914" இலிருந்து மீள்விக்கப்பட்டது