பக்கம்:தரும தீபிகை 1.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வாழ்க்கை நிலை. 33}

முன்பு குறித்த அறம் = மேலோாாலும் . நாலோராலும் முதன்மையாகக் கருதிக் குறித்துள்ள த ரு ம ம். என்றது இல்லறத்தை. இல்லறம் அல்லது நல்லறம் அன்று ' என ஒளவையார் உாைத்துள்ள குறிப்பைக் கூர்ந்து நோக்கி இதன் செவ்வியையும், சிறப்பையும் தேர்ந்து கொள்க.

துறவறம் முதலிய எல்லா அறநெறிகளுக்கும் இல்லறம் இனிய ஆதாரமாய்த் தலைமை எய்தி கிற்றலால் அதன் கிலைமையும் பொறுப்பும் அறியலாகும்.

அன்புறு மனைவியும் அறிவுயர் கணவனும் பண்புடன் மருவிப் பணிபுரிந்த போது தான் கரும கிலையமான இம் மனை வாழ்க்கை இன்பம் மிகப் பெற்று இனிது நடந்து வரும்.

தருமம்எனும் பண்டம் இடும் சகடமாம் மனே வாழ்க்கை

கருமதுகம் பிணித்துமனேக் காதலியும் தானும்என

இருவராய் முறைசெலுத்தின் எத்துணைத்து ரமும் செல்லும்

ஒருவராய்ப் பூண்டிழுப்பின் ஒரிறையும் செல்லாதால்.

- (திருக்கும்ருலப் புராணம்)

மனே வாழ்க்கையை இங்கனம் உருவகம் செய்திருக்கிரு.ர். பல வகையான புண்ணியங்களைத் தாங்கி யுள்ளமையால் மனே வாழ்வு தருமச் சாக்குகள் ஏற்றிய வண்டி என வந்தது. கருமம் புரியாவழி தருமம் கடவாது ஆதலால் அதனை துகம் என்ருர், கருமத்திற்கு ஆதாரம் கருமம் என்பது இங்கே கன்கு தெரிய கின்றது. இந்த வாழ்க்கை நிலைக்கு முன் வந்துள்ள அதிகாரத்தை யும் வைப்பு முறையையும் நுட்பமாக நோக்கி உறவுரிமையை ஒர்ந்து உறுதி நலனே உணர்ந்து கொள்க.

புண்ணியங்களுக் கெல்லாம் விளை கிலம்ான இத்தகைய குடி வாழ்க்கையைக் கண்ணியமுடன் கடத்தின் எண்ணிய இன்ப நலங்கள் யாவும் எளிதின் எய்துகின்ருர்; இருமையும் பெருமை யாய் இசைமிகப் பெறுகின்ருர்.

காதல் மனைவியுடன் கருத்து ஒத்து அமர்ந்து சீவர்களுக்கு ஆகாவு புரிந்து அறமும் புகழும் எவ்வழியும் இனிது பெருகி வா உன் வாழ்க்கையைச் செவ்விதாகச் செய்க என்பது கருத்து.

-** = -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/338&oldid=1324915" இலிருந்து மீள்விக்கப்பட்டது