பக்கம்:தரும தீபிகை 1.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வாழ்க்கை நிலை. 335

244 கல்விாலம் மிக்கிருந்தும் கைப்பொருளொன்றில்லையெனின்

ஒல்லுமவன் இல்வாழ்க்கை ஊனமாம்-நல்லவுயிர் புல்லி யிருந்தாலும் பூண்டவுடல் காலிரண்டும் இல்லையெனில் செல்லுமோ எண். (*) இ. ள். - உள்ளத்தே கல்வி கிறைங்கிருந்தாலும் கையிலே பொருள் இல்லை ஆயின் அவனது இல்வாழ்க்கை நன்கு செல்லாது; அரிய உயிர் உடையதாயினும் கால்கள் இலவேல் உடல் இனிது நடவாது என்றவாறு.

இது, பொருள் இல்லாத வாழ்வு புலையாம் என்கின்றது.

கருத்தைத் தெளிவாகக் காட்சிப் படுத்தி உவமானம் இனிது விளக்க வந்தது. இது எடுத்துக் காட்டும் உவமையாம். ஒல்லும் அவன் என்றது கல்வியறிவில் சிறந்த அவனது இயல்பான ஆம் றலையும் ஆண்மையையும் உணர்த்தி கின்றது. ஒல்லுதல் = கூடுதல், பொறுத்தல்.

கலை உணர்வில் எவ்வளவு கலை சிறந்து கின்ருலும் பொருள் இலணுயின் உலக நிலையில் அவன் வாழ்வு ஒளிபெற்று கில்லாது என்ற கல்ை அதன் கிலைமையும் நீர்மையும் தெளிவாம்.

கல்விக்கு உயிரும், பொருளுக்கு உடலும், வாழ்க்கைக்குக் காலும் ஒப்பாம். உவமான நுட்பங்கள் உய்த்துனா வுரியன.

அறிவுமயமாய் ஆனந்த கிலையமா யுள்ள உயிர் உடலோடு மருவிய பொழுதுதான் உருவாய் வெளியே உலாவுகின்றது. அரிய இனிய கல்வியும் பொருளோடு கலந்து கின்ற வழிதான் தெளி வாய்ப் பெருமை மிகப் பெறுகின்றது. -

அருவமான கல்வியும் உருவமான செல்வமும் ஒரு முகமாய் மருவிய பொழுது குணமும் அழகும் கிறைக்க ஒரு குலமகன் போல் கலை கலை சிறந்து கிகழ்கின்றது.

அழகிய உடல் காலால் இயங்குவது போல் விழுமிய வாழ்க்கை பொருளால் பொலிந்து விளங்குகின்றது.

தேகத்திற்குக் கால் போல் வாழ்க்கைக்குப் பொருள். பொருள் இலதேல் வாழ்க்கை முடமாய் மழுங்கிக் கிடக்கும் , ன்பது பெற்ரும். காளுடையது நீளிடை கிலவுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/342&oldid=1324919" இலிருந்து மீள்விக்கப்பட்டது