பக்கம்:தரும தீபிகை 1.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 த ரும தீ பி ைக.

வாழ்வு ஊனம் அடையின் மானம் அழியும்; ஞானமுடைய மனிதன் அங்க ஈன நிலையை அடையலாகாது.

உனது மனைவாழ்க்கை இன்ப கலமுடையதாய் உயர்த்து திகழ வேண்டுமாயின் விாைந்து பொருளைத் தேடிக் கொள். நீ உயர்ந்த கலைஞானியாய் இருந்தாலும் பொருள் இல்லையாயின் அது சிறந்து விளங்காது. o

கால் இல்லை எனில் உடல் செல்லுமோ? என்றது உடல் வாழ்க்கையோடு குடிவாழ்க்கையை எண்ணியறிந்து கண்ணியம் செய்து கொள்ள. உயிர் வாழ்வுக்கு உயிாாதாமா யுள்ளதை உணர்த்திய படியிது.

கால் இாண்டு என்றதற்கு ஏற்பத் தாவர சங்கமங்களாகிய பொருள் வகைகளை உரிமையாகக் கருதிக் கொள்க.

கல்வி மனிதனைத் தெய்வம் என மாண்புறுத்த வல்லது; ஆயினும் மனே வாழ்க்கையை இனிது கடத்தச் செல்வம் அவசிய மாயுள்ளது ; ஆதலின் அதனை ஈட்டிக் கொண்டு இல்லறம் புரிக.

பொருள்வளத்தால் உனது குடிவாழ்க்கை எழில் மிகுந்து இனிது இயங்குகின்றது; அருள் கலங்கள் வளர்கின்றது; இந்த உண்மையை உணர்ந்து விாைந்து உறுதி செய்து கொள்ளுக.

o, a so

345 வருவாய் அளவறிந்த வாழ்விவ் இரண்டும்

இருகண்ணும் வாழ்க்கைக்கொன்றின்றேல்-ஒருகண் உடையான்போல் உட்கும்.அவ் ஒன்றும் இலதேல் அடியோ டழிங்து விடும். (டு)

பொருள் வருவாயும் அவ் வசவுக்குத் தகுந்த வாழ்வும் மனே வாழ்க்கைக்கு இரண்டு கண்களாம்; அவற்றுள் ஒன்று மட்டும் இருந்தால் அது ஒரு கண் உடையதாம்; இருவகையும் இலையாயின் அக்குடி முழுதும் குருடாய் இருளடைந்து போம் என்றவாறு.

மனே வாழ்க்கைக்குப் பொருள் அவசியம் என்பதை மேலே கண்டோம் ; இதில் அதனைப் பேணி ஒழுகும் முறைமையைக் - ПГаллат வருகின்ருேம். வருவாய்= வருகின்ற பொருள் éడి.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/343&oldid=1324920" இலிருந்து மீள்விக்கப்பட்டது