பக்கம்:தரும தீபிகை 1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தரும பிேகை

உணவை உண்டால் உயிர்களுக்கு என்றேனும் பிணிகள் உள வாகுமா? யாதொன்றும் உண்டாகாது; நீ இல்லாமல் உண்டவர் நோய்வாய்ப்பட்டு அல்லலுழந்து அழிவார் என்றவாறு.

நன்ருகப் பசித்த பின் புசித்தால் வாடிய பயிர்க்கு நீர் வார்த்தது போல் உயிர் செழித்து விளங்கும்; பசியாமல் உண் டால் பிணிகள் பல மண்டி அவலமான அழிவுகள் நேரும் என்க. உணர்ந்து என்றது பசியளவை ஒர்ந்து அறிந்து என்ற வாறு. பசியறியாமல் உண்டால் உண்டவுனவு நஞ்சாப் உயிர் க்கேடு செய்யும்; உண்மையை உணர்ந்து உறுதி கானுக. வாய்க்குனவே மண்டி வயிறறியா துண்டுவந்தான்

நோய்க்குணவாய் நொந்து படும்.' என்ற தல்ை பசியின்றி யுண்டவர் படுதுயரம் அறியலாம்.

|

27. செல்வர் சிலர்கின்னேச் சேராமல் சேர்ந்தவெல்லாம். புல்லி விழுங்கிப் புரண்டெழுவார்-அல்லல்பின் கொண்டு குலைவார் குலப்பசியே உன்பெருமை கண்டு தெளியாரோ காண். (எ)

இ-ள் பசியே! சிலர் உன்னைக் காணுமல் கண்டவற்றை யெல்லாம் உண்டு கடும்பிணி கொண்டு வருந்துகிருர், வருந்தியும் உனது பெருந்தன்மையை உணராது மேலும் மேலும்அருங்தி உழல்கின் ருர் என்றவாறு. புல்லி=அள்ளி.

விழுங்கி என்றது இழிவு தோன்ற நின்றது. பசி அறிந்து உண்னும் பண்புடையாளர் பலர் உளர்.ஆதலால் இங்கே சிலர் என வந்தார். குலப்பசி என்றது மனுக்குலம் தழைக்க வந்துள்ள அதன் மாட்சி கருதி. *

கண்டு தெளியாரோ? என்றது வயிறறியாதுண்டமையால் நேர்ந்ததுயரங்களை அனுபவிக்கறிந்தும் மறுபடியும் படுதீன்ரியா வாராய்க் கொடுநோய் கொண்டு கெடுவாரைக் குறித்துப் பரிந்து - கூறியபடியிது. o

"குடல் காய ஒர்ந்து குறிக்கொண் ட்ருந்தின் உடல் காய மாகும் உயிர்க்கு”

என்பதை உணர்ந்தொழுகி யுயர்நலம் அடையவேண்டும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/35&oldid=1324603" இலிருந்து மீள்விக்கப்பட்டது