பக்கம்:தரும தீபிகை 1.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வாழ்க்கை நிலை. 器鱼邻

கடமையைக் கருதிச் செய்பவனுக்கு எல்லா தலங்களையும் இனிது உதவி தருமதேவதை அவனே உவந்து காத்தருளுகின்றது.

_ o

249. மக்கள் மனேவி மருவி அயலமர்ந்த

ஒக்கலிவர் எல்லாரும் உள்மகிழப்-பக்கமெங்கும் அன்போ டறம்வளர ஆள்வானே எஞ்ஞான்றும் இன்போ டுயர்வன் இனிது. (க)

இ. ள்.

மனைவி மக்கள் ஒக்கல் முதலிய உறவின்ங்கள் எல்லாம் உள்ளம் மகிழ அயல் எங்கும் தருமம் வளா. மனே வாழ்க்கையை ஆண்டு வருபவனே என்றும் இன்ப கிலையில் நீண்டு திகழ்வன் என்றவாறு.

சிறந்த ஆண் மகனுய்ப் பிறந்தவன் தான் புரத்து வா வேண்டியஉரிமைகளையும்கடமைகளையும்இஃது உணர்த்துகின்றது.

தனது மனைவிமக்களோடு மட்டும் அமையாமல் உறவினரை யும் பிற இனங்களையும் விரித்த நோக்குடன் பேண கேர்ந்த பொழுதுதான் ஒருவனுடைய அருந்திறலாண்மையும் பெருங் தகைமையும் திருக்கிய பண்பும் சிறந்து திகழ்கின்றன.

எல்லாரும் உள் மகிழ ஆளுதலாவது தன்னைச் சார்ந்தவர் யாவரும் யாதொரு கவலையும் இன்றிச் சுக சீவிகளாய் வாழ்ந்து வரும்படி சூழ்ந்து பேணுதல்.

உரிமையாளரைப் பாது காப்பதில் அன்பு வளர்கின்றது; அயலவரைப் பேணுவதில் அறம் விளேகின்றது.

ஒருவன் தாளாண்மை தன் வீட்டிற்கும் ஊருக்கும் காட் டுக்கும் பயனுய்ப் பாத்து விரியின் அவனது ஈடட்மும் கேட்டமும் சிறந்த பண்பாடுடையனவாய் உயர்ந்து யாண்டும் இன்பம் மிகப் பெறுகின்றன.

மனிதன் இன்பத்தையும் உயர்வையுமே எங்கும் விரும்பி கிற்கின்ருன். அவை புண்ணிய கருமங்களால் போதருகின்றமை யால் அவ் வினை கலங்களைச் செய்து வந்த போதுதான் அவன் எண்ணியபடியே உயர் கலங்களை எய்த நேர்கின்ருன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/350&oldid=1324927" இலிருந்து மீள்விக்கப்பட்டது