பக்கம்:தரும தீபிகை 1.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. வாழ்க்கை நிலை: 345

350. உற்ற குடியை உறுதி பெறவுயர்த்திக்

கொற்றமுடன் கிற்கும் குலமகனை-மற்றிங்த ஞாலமெலாம் ஆளும் கலமருளி நல்லிறைவன் மேலவனச் செய்வன் விரைந்து. (ιδ)

இ. ள். தான் உரிமையாகப் பிறந்த குடியை உறுதிபெற உயர்த்தித் கலைமையாகச் செய்தருளும் குல்மகனே இறைவன் உலகம் எல் லாம் ஆளும்படி பெருமை செய்தருளும் என்றவாறு.

இது, குடியை ஆள்பவன் படியை ஆள்வான் என்கின்றது.

உற்ற குடி என்றது தன்னைக் கலவகைப் பெற்ற குடும் பத்தை. உறுதி பெற உயர்த்தலாவது பொருள் புகழ்களால் தலை மையாக்கி என்றும்.எவரும் மதித்து வரும்படி தன்குடியை நன்கு கிலை பெறச் செய்தல்.

கரும வீாய்ை கின்று யாண்டும் சலியாமல் முயன்று கன் குடியை உயர்த்திக் காரிய சித்தி பெற்றுள்ளமையால் வெற்றி யாளய்ை அவன் வியந்து போற்றநேர்ந்தான். கொற்றம்=வெற்றி"

குலமகன் என்றது சிறந்த ஆண்மகன் என்றவாறு. தான் பிறந்த குடி உயர்ந்து திகழ முயன்று வந்தவன் ஆத லால் குலமகன் என உலகம்கொண்டாட அவன் உயர்ந்து கின்ருன். சேர்ந்த குடும்பத்தை நன்கு பேணி உயர் கிலையில் செய்த அவனை அனைவரும் உவந்து கொள்கின்ருர்; கொள்ளவே பதவியில் உயர்கின்ருன்; உதவிகள் வளர்கின்றன.

மனைவாழ்வை இனிது பேணினவன் பின்பு மாகிலம் ஆளவும் நேர்வன் என்றது அவனது மேனிலையை கினைந்து.

இறை என்பது கடவுளையும் அாசனையும் குறித்துவரும் இரு பொருள் ஒரு சொல். காம் தெரிந்து எல்லார்க்கும் நன்மை செய்யும் தன்மையே இறைமையின் உரிமை ஆதலால் கல் இறை என வந்தது. முறை செய்பவனே இறைவன் நிறை செய்கின்ருன்.

தன் வீட்டை இனிது பேணி வந்தவன் காட்டையும் நன்கு பாது காப்பன் என்று கருகிக் தன் ஆட்சியில் சிறக்க பதவியை உதவி அரசன் அவனே விழைந்து ஆதரித்து வருவன்.

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/352&oldid=1324929" இலிருந்து மீள்விக்கப்பட்டது