பக்கம்:தரும தீபிகை 1.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 த ரும தீ பி ைக.

மனையாளனது வினை ஆண்மையை மதியுடையார் எவரும் மதித்து மகிழ்கின்ருர். கரும கிலையில் உயர்ந்தவன் தரும கிலை யிலும் உயர்ந்து பெருமை மிகப் பெறுகின்ருன்.

இவ் வினையாளனேக் கடவுளும் கனிந்து நோக்கி உலகம் ஆளும் தலைமையை அவனுக்கு உவந்து அருளுகின்ருர்.

"ஞாலம்எல்லாம் ஆளும் நலம்.அருளி இறைவன் மேலவனச் செய்வன்' என்ற தல்ை மனே வாழ்வைப் புனிதமாக கடத்தின வனது கண்ணியமும் புண்ணியப் பேறும் இனிது புலனும்.

உற்ற வாழ்வை எவ்வழியும் புனிதமாகப் பேணி மனிதன் மைெமயுடன் ஒழுக வேண்டும் என்பது கருத்து. உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர்: துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்: அன்ன மாட்சி அனேய ராகித் தமக்கென முயலா கோன்ருட் பிறர்க்கென முயலுகர் உண்மை யானே.

(இளம்பெருவழுதி)

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. . மனே வாழ்க்கையை மாண்புறச் செய்க. இல் வாழ்க்கை எவர்க்கும் இதமானது. ஞான நோக்குடன் அதனே கன்கு பேணுக. பொருளால் வாழ்வு பொலிவுறுகின்றது. அதனை அளவறிந்து பேகனின் வளம் மிகப் பெறும். மனே வாழ்வு உயரின் மாகிலம் புகழும். --- தெய்வ அருளும் சோ வரும். புகழ் வளர்ந்து புண்ணியம் பெருகும். குடி பு:ாங் சவன் படி புசக்தருளுவான். h

உடு வது வாழ்க்கை கிலை முற்றிற்று.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/353&oldid=1324930" இலிருந்து மீள்விக்கப்பட்டது