பக்கம்:தரும தீபிகை 1.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 த ரும தி பி ைக.

பாழாம். "தட்டுக்கு எட்டுச் சட்டி வாங்கிச் சட்டி ஒன்று தட்டு எட்டு என்று விற்ருலும் செட்டி வட்டிக்குக் கட்டாது' என வழங்கி வருதலால் அதன் கொடுமையும் குடி கேம்ெ ஒருவாறு அறிந்து கொள்ளலாம்.

"வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனேகவர் கருத்தினேன்; ஒட்டைச் சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன், தயவிலேன், குதெலாம் அடைத்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன்; உலகில்

பெரியவர் மனம்வெறுத் திடச்செய் எட்டியே மண்ணுங் கட்டியே அனேயேன்,

என்னினும் காத்தருள் எனேயே. (அருட்யா)

வட்டிக்குக் கடன் கொடுப்போாது மனக் குறிப்புக்களையும் வன்கண்மைகளையும் சுட்டி வந்துள்ள இதனை உய்த்துணர்ந்து கொள்க. பொருள் ஆசையில் அருள் ங்ாசம் ஆகின்றது.

பிறனிடம் பொருள் கடன் வாங்கத் தொடங்கிய பொழுதே தன் பொருள் கால் வாங்கத் தொடங்குகின்றது. கடன் கொள் ளுவதில் மடியும் மடமையும் உடன் கொண்டு எழுகின்றன.

வர வுணர்ந்து செலவு செய்து சீரும் செட்டுமாகக் குடித் தனத்தை நடத்தக்கெரியாக மடத்தனமே கடன்வாங்குவதற்குப் பெரும்பாலும் காரணம் ஆகின்றது. ஒரு முறை கடன் பட்டவன் அதிலிருந்து மீளுதல் மிகவும் அரிது. வருகின்ற வாவை வட்டி வாயில் கொட்டுகின்ருன்; கட்டமுடியாமலும் கட்டம் அடை கின்றன். கடன் ஒரு ஈனச் சூனியம் போல் ஏறி விடுதலால் கிலமும் விளையாமல் கிலை கிரிகின்றது.

'விளேகிலம் வெங்கடன் மேவின் விளைவு

விளையா விளையும் வினே. '

என்றமையால் கடனுளியின் விளைவு கிலை காணலாகும். இவ்வாறு பல கேடுகளையும் விளைத்துக் குடியைக் கெடுத்து விடுதலால் "கடன் உள்ள பொருள் எல்லாம் ஒழிக்கும்' என வந்தது.

கடன் பட்டவன் அல்லும் பகலும் உள்ளம் கலங்கி உளைந்து உளேந்து தவிப்பன்; எல்லாரும் அவனே எள்ளி இகழ நேர்வர்; தலை கிமிர்ந்து வெளிவர அஞ்சித் தன் உள்ளேயே அவன் கிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/355&oldid=1324932" இலிருந்து மீள்விக்கப்பட்டது