பக்கம்:தரும தீபிகை 1.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. க ட ன் 349

குலைந்து தளர்வன்; இங்ானம் புலையான துயாங்கள் பலவும் விளைத்துப் பாடழித்து விடுதலால் கவலை பெருக்கி, எள்ளல் கட்ட்டி, பெருமை குலைத்துத், தீமை காட்டும்” எனக் கடனின் திங்குகள் எல்லாம் காண வந்தன.

உயிர்க்கேடு செய்யும் நஞ்சுபோல் கடன் குடிகேடு செய்தலால் அது கடு எண் நேர்ந்தது. கடு=விடம். கடுத்துக் கொல்வது என்னும் காானம் பற்றி இப் பேர் விளைந்தது.

கொடிய துன்பங்களுக்கெல்லாம் நெடிய காரணமாயுள்ளமை யால் கடனே ஒரு கடிய விடமாகக் கருதி அருகு அனுகாது ஒழித்து விடுக. ஒழியாதுவிடின் உன்னை அது ஒழித்து விடும். உண்மையை ஒர்ந்து நன்மையை காடி நலம் செய்து கொள்ளுக.

--so-so

252. மண்டு பெருநோயும் வன்கடனும் வெங் துயரம்

உண்டு படுத்துவதில் ஒப்பெனினும்-கொண்டகோப் ஊனுடலே வாட்டும் உறுகடனே உள்ளுயிரை ஈன முறவழிக்கும் ஈர்த்து. (e–)

இ. ள். பெரும் பிணியும் கொடுங்கடனும் துன்ப நிலைகளில் சமம் ஆயினும் நோய் உடம்பை மட்டும் வாட்டும்; கடன் உயிாை

இழிவுபடுத்தி அழிவு செய்யும் என்றவாறு.

பெருநோய் என்றது குட்டநோய் முதலிய கொடிய வியாகி களை. உடம்புகளைப் பிணித்து கின்று துன்பங்களை உறுத்துதலால் பிணி எனவும் நோய் எனவும் அது பெயர் பெற்று கின்றது.

அந்த நோயை இணேத்துக் காட்டி கடனின் தீமையை இது உணர்த்துகின்றது. வன் கடன் என்றது எளிதில் தீர்க்க முடியாத வலிய கடன. தன்னைத் தொட்டவனைக் கெட்டவன் ஆக்கிக் குடி கேடு செய்து விடும் கொடுமை யுடைமையால் வன்மை அடை பெற்று வன்தது. கடிய கோயினும் கடன் கொடியதாம்.

நோய் துயரம் செய்யுமாயினும் உடல் அளவில் கின்ற வெளியே ஒழியும்; கடன் உள்ளே உயிசைப் பற்றி கின்று கொள்ளித் தீ போல் அல்லும் பகலும் துள்ளத் தடிக்க உள் ளத்தைச் சுட்டு வருத்தும். அச் சுடு தீ படு ைேமயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/356&oldid=1324933" இலிருந்து மீள்விக்கப்பட்டது