பக்கம்:தரும தீபிகை 1.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 த ரும தீ பி ைக.

கடன் வாங்கச் செல்கின்ற உன் உயிரை உடன் வாங்கிக் கொள்வர் என்றது அக் கேட்டை உணர்த்து ஒதுங்குக என உணர்த்திய படியாம். மானக் கேடான அந்த ஈனத்தை மருவற்க

மனிதனது தலைமையையும் கிலைமையையும் கடன் பாழ் படுத்தி விடுகின்றது; அப் பாழில் வீழாமல் நீ வாழ் வேண்டும்.

எப்பொழுதுமே அடிமை என்றது கடனின் கொடுமை தெரிய வந்தது. ஒரு முறை பட்ட கடன் தீர்ந்து போனுலும் அவ் வடு ாோ வசையாய்ச் சேர்ந்து கிற்கின்றது. அவ் வசையுட் படாமல் அசைவில் ஆண்மையுடன் முயன்று இசை புரிந்து வாழ்க. இளிவும் இன்னலும் கடல்ை விளைதலால் அதனே எவ் வகையினும் தீண்டலாகாது.

கடன் உள்ளத்தை அரித்து உயிரைத் துயருறுத்துகின்றது. கடன் கொடுத்தவனே வெளியே காணும் போதெல்லாம் உள்ளே காணம் அழிகின்றது. மானம் மரியாதைகளை ஈனப் படுத்தி வரு தலால் அது இன்ன கிலையமாய் ஒங்கி மனிதனைச் சின்னபின்னம் செய்கின்றது.

உடம்பா டிலாத மனேவிதோள் இன்ன; இடனில் சிறியாரோடு யாத்தநண்பு இன்ன; இடங்கழியாளர் தொடர்பு இன்:ை இன்ன கடனுடையார் காணப் புகல். (இன்னுநாற்பது, 12) துன்ப நிலைகளைத் தொடுத்துச் சொல்லி வரும் பொழுது கடனுடையார் காணப்புகல் இன்ன எனக் கபிலர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். காணக் கேடு ஆகலை இது காணச் செய்தது.

கடனளி கலை கிமிர்ந்து செல்ல முடியாது; செல்வம் உடை யவனுயிலும் கடன் கொண்டால் அவன் உள்ளம் உடைந்து படுகின்றது. கடன்காரன் கடன் லிடான்; பழிகாரன் பழி விடான். ' என்னும் பழமொழியால் கடன் ஒரு கொலைபாதகம் போல்வது; தொலையாத துயரமானது என்பன எளிது புலம்ை. பொள்ளல் உடைபோல் கடன் வாழ்வு எள்ளல் மிக அடை கின்றது. கடன் இல்லாச் சோறு கால் வயிறு' என்னும் வழக்கு பட்டினி கிடக்காலும் கடன் படலாகாது என்பதை விளக்கி கிற்கின்றது. கடும் பசியினும் கடன் கொடும் பழி யுடையது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/359&oldid=1324936" இலிருந்து மீள்விக்கப்பட்டது