பக்கம்:தரும தீபிகை 1.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. க ட ன். 353

க்டமுண்டு வாழாமை காணடல் இனிகே: நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே: மனமாண்பி லாதவரை அஞ்சி அகறல் என மாண்பும் தானினிது நன்கு. (இனியவை நாற்பது, 11)

வாழ்க்கையின் இனிமைகளைக் குறித்து இசைத்து வருங்கால் பூதஞ்சேந்தனர் என்னும் சங்கப்புலவர் இங்கனம் உரைத் திருக்கிரு.ர். கடன் கொண்டு உண்டு வாழாமை காண்டற்கு இன்பமாம் என இதில் தலைமையாகச் சொல்லி யிருத்தலால் அதன் கிலைமை காணலாம்.

254. வெய்யபகை தீநோய் வினே கடனுள் எச்சமின்றிச

செய்ய வகையாகத் தீர்த்தொழிக-நொய்யதென

எண்ணி யிருந்தால் இருங்கறையான் கொண்டழிந்த வண்ணமரம் போல வரும். (r)

இ. ள். பகை தி பிணி வினை கடன் என்னும் இவற்றை அடியோடு திர்த்து விடுக; மிச்சம் வைத்தால் கறையான் பற்றிய மாம்போல் முழுதும் அழிவு நேரும் என்றவாறு.

கடன் வாங்கவே கூடாது; ஒரு வேளை அவசிய கிமிக்கம் வாங்க நேர்ந்தால் அதனை விாைந்து தீர்த்து விட வேண்டும்; அங்ங்னம் தீர்க்கும்கால் மிச்சம் யாதும் வையாமல் முற்றும் துடைத்து விடுக. எச்சம் இருந்தால் அது உச்சமாய் வளர்ந்து இழிவும் அழிவும் விளைத்து விடும்.

கடன் எச்சம் தோம் என்னும் இதில் பிணி தீ வினே பகை களும் உடன் இணைத்து உணர்த்தப்பட்டன.

களையை வேரோடு கல்லி எறிதல் போல் களைய க்தொடங்கிய தீமைக் குழுவையும் எஞ்சாமல் களைந்து ஒழிக்க வேண்டும்; கொஞ்சம் தானே என்று மிஞ்சவிடின் அந்த எச்சம் நாச கிலையில் வளர்ந்து நீசம் விளைக்கும் என்க.

வினை பகை என்றிரண்டின் எச்சம் கினையுங்கால் தீ எச்சம் போலத் தெறும். (குறள், 674) என்னும் இந்த அருமைத் திருவாக்கை ஈண்டு உரிமையுடன் உணர்ந்து கொள்க. கடன் வாங்குவது எளிது; அதனைக்கிரும்பக்

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/360&oldid=1324937" இலிருந்து மீள்விக்கப்பட்டது