பக்கம்:தரும தீபிகை 1.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. க ட ன். 名5虏

பேயார் ன்ன்றது பெருாளாசை மண்டி மருள் கொண்டுள்ள புல்லாை. அவரிடம் எதேனும்ஒன்று பெறு கல் மிகல்ம் துயாமாம்.

கடன் கோடல் எவரிடமும் இழிந்தது: அதிலும் தாம் தெரியாத அம்பரிடம் கொண்டால் அல்லலும் அவமானமும் ஒல்லையில் எழும் ஆதலால் அத் தொல்லையில் விழாகே எனக் கொள்ளும் தீமையை உள்ளம் தெளிய இஃது உணர்த்துகின்றது.

கடனைப் புண் என்று குறித்தது அரிப்பு அருவருப்பு வெறுப்பு முதலிய துயாக் கூறுகள் தோய்ந்து நாளும் துன்பம் புரிந்து வருதல் கருதி. i

தக்கவரிடம் கொண்ட கடன் முதுகில் உள்ள புண் போலாம்; தகாதவரிடம் கொண்டது உள்ளங்கைச் சிாங்கு போல் அல்லலும் எரிச்சலும் பெருக்கிக் கொல்லைகள் மிகச் செய்யும்.

உணவை எடுத்து உண்ணவும் விடாமல் உறு துயராய் அது பெருகியுள்ளது போல் அச் சிறியவர் முறுகி வருத்துவர்.

'கடனைக் கொடுத்துவிட்டு மறுவேலை பார்; அடிப்பில் உலை

ஏற்ற விடேன்; வில்லாததை விற்றுக் கொடு' என்று இன்னவாறு சொல்லாதன எல்லாம் சொல்லித் துயரப் படுத்துவர் ஆதலால்

அப் புல்லர் கடன் பொல்லாதது என வந்தது.

யாரிடமும் எவ்வகையிலும் யாதும் கடன் படாது வாழ் பவனே கண்ணியவான் ஆவன் ; அவ் வாழ்வே புண்ணியம் உடையதாய்ப் புகழ் மலிந்து பொலிந்து விளங்கும்.

'தாளாளன் என்பான் கடன்படா வாழ்பன்ே;

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணுதான்; கோளாளன் என்பான் மறவாதான், இம்மூவர் கேளாக வாழ்தல் இனிது. " (கிரிகடுகம், 12)

தாள் ஆளன் என்றது முயற்சியாளனே. காள்=முயற்சி. வேளாளன் =உபகாரி. கோளாளன் = ஞாபக சக்தியுடையவன். கடன்படாமல் முயன்று வாழ்பவனே உயர்ந்தவன். அவ்வாழ்வே சிறந்தது; அவனது உறவையே அறிவுலகம் உவந்து கொள்ளும் என இஃது உணர்த்தியுள்ளமை காண்க.

_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/362&oldid=1324939" இலிருந்து மீள்விக்கப்பட்டது