பக்கம்:தரும தீபிகை 1.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 த ரும தீ பி ைக.

|

256 தாய்போல் வளைந்து தழுவிக் கடன்கொடுத்துப்

பேய்போல் முனைந்து பிடுங்குவார்-நோயினுமே தியததை எவ்வகையும் தீண்டற்க தேர்ந்துமுயன் முயதையே கொள்க அமர்ந்து. (+)

இ. ள். முதலில் தாய்போல் இனியாாய் வளைந்து க்டன் கொடுத் தவர் பின்பு பேய்போல் கொடியாாய் முனைத்து பிடுங்குவார், தீய நோயினும் தீய அதனை எவ்வகையினும் தீண்டாதே, தெளிந்து முயன்று உய்தியை உணர்ந்து கொள்க என்றவாறு.

H

தம் பொருளைப் பெருக்கிக் கொள்வதில் செல்வர்க்கு ஒரு பெரிய விருப்பம். அதனை வேறு துறைகளில் விரித்துப் பயன் படுத்த மாட்டாமல் வட்டிக்குக் கொடுப்பதில் வாஞ்சை மீக் கொள்கின்றனர். அதிகமான வட்டிக்குப் பணத்தைப் பிறரிடம் விட்டு வைக்க வேட்கை மீதுார்ந்துள்ளமையால் கடன் வாங்க வருபவரிடம் அவர் கனிவு காட்ட நேர்கின்ருர்.

அன்புடையவர் போல் நடித்து கண்பு பாராட்டி இன்புடன் வசப் படுத்திக் கொள்ளுதலால் 'தாய்போல் வளைந்து' என அவர் வழங்கி வரும் உளவுகள் உணர்ந்து கொள வந்தது.

இங்ானம் முன்பு இனியாய்க் கடன் கொடுத்தவர் பின்பு கொடியாாய் மாறி அடு துயர் புரிய மூள்கின்றனர்.

பேய் போல் என்றது அவரது கடுமையும் கொடுமையும் கருதி யுனா வக்கது பேய் உயிர்க்கேடு செய்யும்; அவர் குடி கேடு செய்கின்ருர். கெடு நிலையில் ஒரளவு ஒப்பாயினும் பேரிழவு புரிவதில் அவர்க்கு கோளவாகப் பாரளவில் வேறு அளவு கூற முடியாது. பொருளே உயிரினும்அருமையாகக்கருதி உரிமையுடன் அவர் உருகி யுள்ளவர். முகவினும் வட்டியின் மீதே அவருக்கு அதிக ஆசை. நாளும் பெருக்கி நீள எண்ணி கெடிது கிற்றலால் அவ்வாவு தாமத மாய போது பசி கொண்ட பேய் போல் விசை மண்டி எழுந்து வெந்துயர் புரிகின்ருர்.

கடன் வாங்குங்கால் இன்பமும் திரும்பச் செலுத்துங்கால் துன்பமும் கொண்டவர்க்கு உண்டாகின்றன. கொடுக்கின்றவர்க்கு அவ்வாறு இல்லையாயினும் சில இடங்களில் அல்லல்கள் அடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/363&oldid=1324940" இலிருந்து மீள்விக்கப்பட்டது