பக்கம்:தரும தீபிகை 1.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 த ரும தீ பி ைக.

இவ் வாருன் தொழில் வகையிலன்றி வேது எவ்வாற்ருனும் கடன் கோடல் தீதேயாகும்.

இ ல் லா மை எல்லாத் துயரங்களுக்கும் இடமாம்; அப் பொல்லா வறுமை புகுந்து வருக்கினும் புலையான கடனில் புகலாகாது என்றது அ. க ன் அல்லலையும் அவமானத்தையும் கினேந்து. வறுமை துன்பத்தை மாத்திரம் காட்டும்; கடனே இளிவு அவமதிப்பு முதலிய கொடிய பழிகளையெல்லாம் ஒருங்கே கூட்டி விடும் ஆதலால் அக் கொடும் பாவியை உயிாழிய நேர்க் தாலும் அருகு அணுகலாகாது.

வருந்தி முயன்று பொறுமையொடு பொழுது போக்க ” ஒருவனுக்குக் தரித்திரம் நேர்ந்து விட்டால் அவன் உணர்ந்து ஒழுக வேண்டிய உணர்ச்சி நிலைகளை உாைத்த படியிது.

இல்லை என்று சொல்லிப் பிறரிடம் பல்லைக் காட்டிக் கடன் கேளாதே; அது கொடிய தொல்லையாம்; இயன்ற அளவு முயன்று வாழ்; எல்லா நலங்களும் அதில் விளைந்து வரும். முயலாமல் நின்று அயலை நாடுவோர் செயலிழக்க பேடிகளாய்ச் சீாழிய நேர்கின்ருர்; அந்த அழிவில் வீழ்தல் அழியாக் துயரமாய்ப் பழி மிகப் பெருக்கிப் படுதுயர் செய்யும்.

பிழைப்பு உழைப்பில் உள்ளது; அதனைப் பிழையறச் செய்; வேறு பிழை வழிகளில் இறங்காதே.

எழையாய் இருந்தாலும் இருக்கலாம் : கடனளியாய் இருக்கக் கூடாது. அதல்ை சுயமதிப்பு அழித்துபோம்.

- i. வறியனை ஒருவன் ஒரு நாள் உணவு இலணுயினன்; நல்ல மானி ஆதலால யாரிடமும் யாதும் கேளாமல் அன்று பட்டினி கிடந்து கழித்தான். மறுநாள் எழுத்தான்; மதிப்புடன் முயன்று மாண்புடன் வந்தான். இரவு நேர்ந்த பசிக்கு அஞ்சிப் பிறரிடம் அவன் கடன் வாங்கி யிருந்தால் கடன் கொடுத்தவன் உடல் உள்ள அளவும் அவனை இளிவாகவே எண்ண நேர்வான்; அந்த ஈனம் யாதும் கோாமல் தன் மானம் பேணி வந்த அவன் யாண்டும் தாழ்வருமல் மூண்டு முயன்று முதன்மை அடைந்தான். அக்த ஆண்டகையின ஆளவினே ஆண்மைகள வாழ்வினே யாளர்கள் யாவருக்கும் உயர்ந்த வழிகாட்டிகளாய் ஒளி நீட்டி கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/369&oldid=1324946" இலிருந்து மீள்விக்கப்பட்டது