பக்கம்:தரும தீபிகை 1.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தரும பிேகை

ளுக்கு என வெளியே காணப் படைத்துப் பின்பு உனக்கே கொடுத்து மக்கள் இன்புறுகின்றனர்; இதனுல் உனது தனி மகி மை உணர நின்றது என்றவாறு

பண்டங்கள் ஈசனுக்கு என்று இசைந்திருக்கும் வரையும் இன்பமில்லை; எடுத்து உண்டபொழுதுதான் உயிரினங்கள் உவ கையுறுகின்றன ஆதலால், 'உன்பால் வைத்து இன்பம் உறு கின்ருர்’ எனப் பசியின்பால் யாவருக்கும் இயல்பாக வுள்ள அன்பு நிலை கூற வந்தது.

கடவுளினும் பசி உடலுயிர்களுக்கு உரிமை மிக வுடையதா யுள்ளே மருவியுள்ளமையால் பிரியமா அது பேணப் படுகிறது.

உடல் அமைப்பில் ஒர் அரிய தத்துவமாய் உள்ளுறைந்து உயிர் களே ஆட்டிவருகின்ற ஆற்றலுக்குப் பசி என்று பெயர். உண்ட உணவுகளைத் தகிக்கொதுக்கி உயிராதாரமாய் அது ஒளிசெய்துள் ளது; அதன் நிலைமையையும் கலைமையையும் உணர்ந்து நெறி செய்தொழுகின் பொறி புலன்கள் நலமாய் உடல் வாழ்க்கை நெடிதோங்கி வரும்; அதனால் உயிர் வாழ்வு சுகமாய் உயர் பேரின்பம் உண்டாம் என்பது இதன் திரண்ட பொருளாம்.

பசியை முன்னிலைப்படுத்தி அதன் இயல்புகளைப் பலபடி யாக இதுவரை பகர்ந்து வந்தது மானுட சிருட்டியின் அற்புத நிலையை துட்பமாக வுணர்ந்து கற்பயன் அடைய என்க.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பசி கடவுள் என நின்று உடலுயிர்களே இயக்கி வருகிறது. அஃது இல்லேயாயின் உயிர்கள் இயங்கா. எல்லா கலங்களும் அதன் கண் உள்ளன. அதல்ை தவம் விளேகின்றது. ஒளி வளர்கின்றது. உயிர் உயர்கின்றது. - அதனேப் பேணுது உண்டால் பிணிகள் பெருகும். யாவரும் பசிமுன் அடங்கி நிற்பர். அரசரும் அதனே ஆதரித்தெழுவர். கண்கண்ட தெய்வமாய் அது யாண்டும் கனிந்துள்ளது.

க-வது பசி முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/37&oldid=1324605" இலிருந்து மீள்விக்கப்பட்டது