பக்கம்:தரும தீபிகை 1.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 த ரும தீபிகை.

தொழில் வழி முயன்ருல் பொருள் சாந்து வரும்; பழியான இாப்பால் இழிவே உறும் என்பதை உணர்த்ததற்கு இல் வுல மானங்கள் வந்தன. - -

பசு, இயற்கை அன்னைக்கும்; முலை, பலன் சாக்கும் கரும கிலைக்கும்; கறத்தல், தொழில் முயற்சிக்கும் ஒப்பாம்.

வறுமைத் துன்பத்தை முயன்று நீக்காமல் இாந்து திர்க்கத் துணிவது இழிந்த மடமையேயாம். எவரும் இகழ்ந்து கைக்கத் தக்க அந்த இழிவழிகளில் புகாமல் தொழில் முறையில் புகுத்த

உயர்ந்து கொள்க.

இன்மை இடும்பை இரந்துதிர் வாம்என்னும்

வன்மையின் வன்பாட்ட தில். (குறள், 1063)

வாசகத்தால் பொருள் சம்பாதித்து வாழலாம் என எண் துவது மதிகேடான ஒர் அதிசயத்துணிவாம் என இாப்பாளனது இழி நிலைக்கு இாங்கி வருக்கியிருக்கும் இதன் பொருள் நிலையை துணுகி உணர்ந்து கொள்க. இாவை கச்சி எழுகின்ற வன்மையைக் காட்டிலும் வன்பாட்டது வேறு இல்லை என்றது இகழ்ச்சிக் குறிப்பு. வன்பாடு=வலியது, முாட்டுத்தனம். புண்பாடான அவ் வன் பாட்டில் புகாமல் பண்பாடுறுக என அறிவுறித்தியது.

இரந்து கொண்டு ஒண்பொருள் செய்வல் என்பானும், பரந்தொழுகும் பெண்பாலைப் பாசம்என் பானும், விரிகடல் ஊடுசெல்வானும், இம்மூவர் அரிய துணிந்து வாழ்வார். (கிரிகடுகம், 73) யாசித்துப் பொருள் சம்பாதிக்கலாம் என்று எண்ணுவதும், வேசியைப் பாசம் என்று ம்ைபுவதும் கடல் நடுவே நடந்து செல்ல. முயன்றது போன்ற ஒர் அறிவினமான அதிசயத் துணிச்சலாம் என இஃது உணர்த்தியுள்ளமை காண்க. இாப்பு மிகவும் அபாய மானது; அல்லல் மிக வுடையது; அழிவு தருவது; வாழ்வைப் பாழ் ஆக்குவது; அதில் வீழ்த்து விளியாதே. இன்ன இரப்பை இதமாக எண்ணினன் அன்னே இறந்தான் அவன். என்னும் இதல்ை இரவு சாவு என்பது புலம்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/383&oldid=1324960" இலிருந்து மீள்விக்கப்பட்டது