பக்கம்:தரும தீபிகை 1.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 த ரும தி பி ைக

கழியின் தேர் வடமாய்ப் பெருகி யெழும்; அதன்பின் வலிய இரும்புச் சங்கிலி போல் நெடிதாய் நிமிர்ந்து அது நீண்டு நிற்கும் என்பதாம்

இரும்பு என்பது இருப்பு என வலிந்து வந்தது. தொடர்= சங்கிலி. ஒருவுதல்= நீங்குதல். நீக்கமின்றி விக்கி நிற்கும் தொட ரின் தொடர்பு தெரிய இத் தொடர் மொழி வந்தது. பொல்லா என்றது குடி சூது கோள் முதலிய தீய தொடர்புகளை. ஒரு கெட்ட பழக்கம் முதலில் படிக்க பொழுது மிகவும் மெலிதாயிருக்கும்; அச் சமயம் அதனைத் துடைத்து விடுதல் எளி தாம்; துடையாது நின்ருல் அது வலிதாய் வளர்ந்து உள்ளத்தை யும் உணர்வையும் கவர்ந்து கொள்ளும்: கொள்ளவே உயிர்கள் அதன் வசமாயிழிந்து பழி வழிகளில் உழந்து பாழாய் ஒழித்து போம் என்க.

நூல், கயிறு, வடம், சங்கிலி என்ற குறிப்பினல் பழக்கத் தை ஒருநாள் நிலைக்க விட்டாலும் மறுநாள் அதனை நீக்க முடி யாமல் மனிதன் நிலை தளர்வான் என்பது புலம்ை.

பழக்கம் இரும்புச்சங்கிலிபோல் மனிதனே இறுகப் பிணித்து விடும்; அப் பிணிப்பிலிருந்து கப்ப இயலாது; இக் நுட்பத்தை உய்த்துணர்ந்து கெடுதலான பழக்கம் யாதும் படியாமல் அடி நாளே அடியோடு அதனே ஒழித்து விடவேண்டும்என்பது கருத்து. 33. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்பின் ஒட்டித் தொடரும் உறுதியால்-கெட்ட பழக்கம் சிறிதும் படியாமல் கல்ல வழக்கம் வளர வளர். (E)

இ-ள் இளமையில் பழகிய பழக்கம் இறுதி வரையும் உறுதியாகத் தொடரும் ஆதலால் முதலிலேயே தீயதை அணுகாமல் நல்லதை நாடிக் கொள்க என்றவாறு.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது இந் நாட் டில் வழங்கிவரும் பழமொழி. மனிதனது நிலையையும் பழக்கத் தின் இயல்பையும் இது எவ்வளவு அழகாக உணர்த்தி கிற்கிறது! பிள்ளைப் பருவத்தில் நல்ல பழக்கங்களைப் பழகிக் கொள்ள வேண்டும்; இல்லையானல் சாகும் வரையும் தொல்லையாகும்; செத்தொழிந்தாலும் கொட்டு வந்த கெட்ட பழக்கம் விட்டொ ழியாக இதனை உய்த்துணர்ந்து உயர் சலம் கழுவி உய்தி பெறுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/39&oldid=1324607" இலிருந்து மீள்விக்கப்பட்டது