பக்கம்:தரும தீபிகை 1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பழக்கம் 33

ஒரு நாள் பழகியது உள்ளத்தில் படிந்து உடல் அழிந்தாலும் கான் அழியாமல் உயிரைத் தொடர்ந்து கிற்கும் ஆகலான் நல்ல பழக் கத்தை இளமையிலேயே நலமுற ஆராய்ந்து கொள்க. படியாமல் என்றது இருபொருள்பட கின்றது. தீயதை நீ பழகிக்கொள்ளாமலும், உன்னிடம் அது படிந்து விழாமலும் பாதுகாத்து வருக என்றவாறு.

கொஞ்சமும் கடடாவகை நெஞ்சம் பேணுக என்பார் சிறிதும் என்ருர். கெட்டது அணுவளவே ஆயினும் எட்டிவிதைபோல் இன்னல் களே விளேக்கும் , அது எவ்வழியும் யாதும் கண்ணுதபடி கண்ணுான்றி நோக்கிக் களைந்து போக்கி எண்ணுான்றி யருள்க என்பதாம்.

கெட்ட பழக்கம் உயிரைக் கெடுத்துவிடும் ஆதலால் அதனே பாண்டும் ஒட்டாது ஒழுகுக என்பது கருத்து.

34. தீய பழக்கம் தினேயளவே ஆலுைம்

நேய முடன்சிலநாள் நீளவிடின்-மாய மலையாய் வளர்ந்து வலுதிய னக்கிப் புலேயாடச் செய்யும் புகுந்து. (#)

இ-ள். தினை அளவு தீயபழக்கமும் நாளடைவில் மலையளவாய்ப் பெருகி நல்ல மனிதனேயும் பொல்லாத கொடியனப் புலைப்படுத்திவிடும் என்ப தாம். வலுதியன்=எவ்வழியும் திருந்தாத கிண்ணிய தீவினையாளன்.

தினே என்பது தானிய வகையுள் ஒன்று. நுண்ணிய உருவினது. கடுகு அணு என்பனபோலச் சிறிய அளவுக்கு ஒர் எடுத்துக்காட்டாக ஈண்டு அது இசைந்து கின்றது.

காலமும் பயிற்சியும் சாலவும் சிறிதே யாயினும் தீயபழக்கம் மாய மலேயாய் வளர்ந்து தூய உயிர்களைத் தீயனவாக மாற்றி மாயச் செய் யும் என்க. எனவே அதன் தீமையும் திண்மையும் நன்கு புலனும்.

நொடிப்பொழுது தொட்ட பொடிப் பழக்கமும் பின்பு யாதும் விடுப்பரியதாய் மனிதனே வடுப் படுத்திக் குடிப்பழி செய்து வருதலைப் படிப்படியாக உலகம் பார்த்து வருகின்றது.

புலையாடச் செய்யும் என்றது தலைமையான நிலைமை மாறி என மாய் இழிந்துபடும்படி மோனமா அது இயற்றிவிடும் என்றவாறு. புகுந்து என்றது வலிந்து இடங்கொண்டு அஃது அடியூன்றி கிற்கும் அடல் தோன்ற கின்றது. உள்ளே புகவிடாதே என்பதாம்.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/40&oldid=1324608" இலிருந்து மீள்விக்கப்பட்டது