பக்கம்:தரும தீபிகை 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 த ரும தி பி கை

பழக்கத்தின் வளர்ச்சியும் வன்மையும் வியத்தகு கிலையின தீயதை முளையிலேயே கிள்ளி எறிக ; எறியாமல் ஏமாந்து இருப்பின் அது வலி தாய் ஓங்கி உன்னை லெதிரியச்செய்து சீசன் ஆக்கி முடிவில் எரிவாய் நாகில் கொடிதாய்த் தள்ளிவிடும் என்பது குறிப்பு.

எள்ளள வேலுைம் இழிபழக்கம் ஈனமெல்லாம் உள்ளள வீனும் உணர். (அரும்பொருளமுதம்)

என்பதை உணர்ந்து உறுதி நலம் பெறுக என்பது கருத்து.

35. சார்ந்த இனத்தின் தகவே உயிரினங்கள்

நேர்ந்து திகழும் நிலைமையால்-ஒர்ந்துமுன் கல்லாரை காடி தயக்க நயமிலாப் பொல்லார் ஒழிக புறம். = (டு)

இ-Tெ. தாம் மருவிய இனத்தின் இயல்புக்குத் தக்கபடியே உயிரினங்கள் உயர்வு தாழ்வுகளே அடைகின்றன ; ஆகலான், பொல்லாரைப் புறம் ஒதுக்கி நல்லாரை நாடிக் கூடிக்கொள்க என்றவாறு.

மனிதர் மாத்திரமே யன்றி மிருகங்களும் பறவைகளும் கட்டத் தாம் சேர்ந்த இனத்தின்படியே செயல்கிலைகள் நேர்ந்து வருகின்றன ; ஆதலால், உயிர் இனங்கள் என வந்தது. பன்றியோடு சேர்ந்தால் கன்றும் மலம் தின்னும் ' என்னும் பழமொழி இந்நாட்டில் எங்கும் வழங்கி வருகின்றது. இதல்ை ஈனச் சேர்க்கையால் விளேயும் இழி கிலை தெளிவாம்.

நல்லா ை நாடி நயக்க என்றது சொல்லாலும் செயலாலும் பல் வகையிலும் ஆராய்ந்து நல்லவரைத் தெளிந்து தமராகத் தழுவிக் கொள்க என்றவாறு. நயத்தல்=நயங்து பேணுதல்.

பளிங்கு போலவே மனிதன் சார்ந்ததன் வண்ணமாய் நேர்ந்து விடுகின்றன் ஆதலால் முதலிலேயே புன்மையாளரைப் புறம் ஒதுக்கி நன்மையாளரை அவன் ஒர்ந்துகொள்ளவேண்டும் என்க.

நல்லார் என்றது தருமகுண சீலரை.

பொல்லார் என்றது தீவினே யாளரை.

நயம் இலா என்றது அவரது இயல்புணர வந்தது. நயம்=நன்மை, அறம். பயன் உணர்ந்து பயில்க என்றபடி,

புறம் ஒழிக. என்றது அயலே யாதும் அணுகலாகாது என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/41&oldid=1324609" இலிருந்து மீள்விக்கப்பட்டது