பக்கம்:தரும தீபிகை 1.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பழக்கம் 39

உள்ளும் புறனும் நலமுறும்படி நாளும் நல்லவரோடே பழகி మడి) 19వు உயிர்க்குறுதிசெய்து வர வேண்டும் என்பது கருத்து.

40. நல்ல கினேக கலம்புகல்க எவ்வுயிர்க்கும்

ஒல்லே இதமாய் உதவி செய்க-எல்லா வழியும் இனிய வகையே பயில்க ஒழியும் பிறவி புடன். (ώ

இ-ள்.

நல்ல எண்ணங்களேயே எண்ணுக ; பயனுடைய மொழிகளையே பேசுக; எவ்வுயிர்க்கும் இனியய்ை கின்று எங்கும் இகங்களேயே செய்க; எல்லா வழிகளிலும் கல்லவையே பழகுக ; இவ்வாறு புரிந்து வரின் வெவ்விய பிறவி விரைந்து ஒழிந்துபோம் என்றவாறு.

மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றும் யாண்டும் இனியவழிகளில் பழகுக என்றபடி. கினேவை முதலில் குறித்தது, சொல்லுக்கும் செய அக்கும் அது மூலகாரணம் ஆகலின் அதன் கிலேமையையும் தலைமை யையும் தனிமையாக உணர்ந்துபேண என்க. எண்ணம் நல்லது ஆயின், சொல்லும் செயலும் என்றும் நல்லனவாகவே யிருக்கும்.

தீய எண்ணங்கள் நஞ்சுதோய்ந்த பால்போல் நெஞ்சைப் பாழ் படுத்திவிடும் ; விடவே உணர்வு பாழாய் உயிர் நாசமடையும் ஆகலின், கெடுமூலமான அத்தீமைகளைக் கனவிலும் கருதாமல் நல்ல சிந்தனை

களேயே நாளும் நயங்து பழகி வருக என்பார் நல்ல நினைக என்ருர்.

'பயில்க என்றது பழக்கத்தின் இயல்பான பயிற்சி தோன்ற வங்தது.

கிலத்தைப் பண்படுத்தி அதில் நல்ல வித்துக்களே விதைத்தால் இனிய பலன்கள் பல விளைந்து இன்பம் பயக்கும் , அங்ஙனம் விதை யாது விடின், கெட்டவித்துக்கள் விழுந்து முளேத்துக் கேடு விளேக்கும். அதுபோல், கெஞ்சில் நல்ல கினேவுகளே கினேயாது விடின் தீய எண் ணங்கள் புகுந்து வளர்ந்து தீங்கு புரியும் என்க. எனவே நல்ல சிங் தனகள் எவ்வளவு உரிமையோடு உறுதியாக நாளும் பழகிவர உரி யன என்பது இதனுல் நன்கு அறியலாகும்.

எவ்வுயிர்க்கும் என்றது பறவை, விலங்கு, ஊர்வன, நீர்வாழ்வன முதலிய எல்லாப் பிராணிகளுக்கும் என்றவாறு.

ஒருவன் பிற உயிர்கட்குச் செய்யும் உதவிகலங்க ளெல்லாம் தன் உயிர்க்கே கன்மையாய்த் தழைத்து வருகின்றன; வரவே அப் புண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/46&oldid=1324614" இலிருந்து மீள்விக்கப்பட்டது