பக்கம்:தரும தீபிகை 1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 த ரும தீ பி. கை

னியப் பெருக்கால் எண்ணிய போகங்களேயெல்லாம் இனிது நுகர்ந்து மேன்மேல் உயர்ந்து முடிவில் முடிவிலின்பமான முத்திப் பேற்றை உறுதியாக அடைவன் ஆதலால் பிறவி ஒழியும் ' என்ருர், i

மனிதன் புனித மனமுடையய்ைத் தினமும் இனிய பழக்கங்களைப் பழகிவரின் அவன் பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுவான் என்க.

முக்கரணங்களையும் தக்க வகையாகப் பாதுகாத்து, எவ்வுயிர்க் கும் இதமாய் ஒழுகி, யாண்டும் நல்ல பழக்கங்களையே மக்கள் பழகி வரவேண்டுமென்பது கருத்து

இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புர்ேப் பாய்ச்சி அறக்கதிர் ஈனுமோர் பைங்கூழ் சிறுகாலைச் செய். (அறநெறிச்சாரம்)

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

மனிதன் பழக்கத்தின் பழம். பழகிய படியே பழுத்து வருகின்ருன். நல்ல பழக்கம் நலம்பல நல்கும். கெட்ட பழக்கம் கேடெல்லாம் விளேக்கும். பொல்லாதவற்றைப் புறமே தள்ளுக. நல்லனவற்றை நயந்து கொள்ளுக. தீய பழக்கம் நோயினும் தீயது. இழிபழக்கமுடையாரே பழிகளே விளேத்துப்பாவிகள் ஆகின்றனர். இழிந்தவருடன் பழகின் உயர்ந்தவரும் கெடுவர்.

நல்லது கினைந்து, நல்லது மொழிந்து, நல்லது பழகினர் எல்லா

நலங்களையும் எளிதே அடைந்து இன்பம் பெறுவர்.

ச-வது பழக்கம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/47&oldid=1324615" இலிருந்து மீள்விக்கப்பட்டது