பக்கம்:தரும தீபிகை 1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெற்ருரைப் பேணல் 45

44. பெற்றவரைப் பேணிப் பெரிதொழுகும் பிள்ளைகளே

மற்றவர்கள் கண்டு மனமகிழ்ந்து-சுற்றமெனச் சூழ்ந்து தொழுவார் துறக்கத்தே அன்னவர்பின் வாழ்ந்து மகிழ்வார் வளர்ந்து. (*)

தாய் தங்தையரைப் பேணி ஒழுகும் பிள்ளைகளை உலகத்தார் உவந்துபேனுவார் ; மறுமையிலும் அவர் பெருமை மிகப்பெறு வர் என்றவாறு.

இம்மைப் பயனும் மறுமைப் பேறும் கூறிய படியிது.

மாதா பிதாக்களை ஆதரித்து வருபவர் உத்தம புத்திாாாய் ஒளிபெற்று விளங்குவர் ; அவரது குணநலங்களைக் கண்டு மனம் மிக மகிழ்ந்து பிறர் எல்லாரும் உறவுரிமையுடன் அவரைப் புகழ்ந்து போற்றுவர் ஆதலால் சுற்றம் என மற்றவர்கள் தொழுவார் ’’

கடவுளே வழிபட்டு நெறியோடு ஒழுகிவரும் மக்கள் பெரி யோர் எனப் பெருகி கிற்கின்றனர்; அங்கிலையினை நோக்கி உலகம் அவரை உவந்து பணிந்து வருகின்றது ;காணுத ஒன்றைக் கருதி வழிபடுபவர்.இவ்வளவு பெருமை அடையின் கண் கண்ட கடவுள ாாகிய இரு முதுகு வரை நேரே இனிது பேணி வருபவர் எவ் வளவு மகிமையை அடைவர் என்பதை அவ்வளவையும் ஆராய்ந்து

அறிந்து கொள்க என்பதாம்.

என்ருர்.

ஈன்றவர் மகிழ்தலால் அத்தோன்றல்களுக்குப் புண்ணியம் விளைகின்றது : விகளயவே மறுமையில் சுவர்க்க போகங்களுக்கு உரியவாாய் அவர் உயர்ந்து விளங்குகின்ருர் ; ஆகவே துறக்கத் தே வாழ்ந்து மகிழ்வார் ’

என வந்தார்.

புகழும் புண்ணியமும் ஒருங்கே அடைந்து இருமையினும் அவர் இன்பம் மிகப்பெறுவர் என்பது கருத்து.

தாயினிற் சிறந்த தெய்வம் இலையுயர் தங்தை தன்னின் ஏயகற் குருவும் இல்லை என்னின்மற் றிவர்கள் தாளில் தூய்மலர் தூவி நாளும் தொழுதிடும் அறிஞர் தாமே ஆய்கதிர் பரப்பும் பொன்னட் டமரராய் இனிது வாழ்வார்.

(கூர்ம புராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/52&oldid=1324620" இலிருந்து மீள்விக்கப்பட்டது