பக்கம்:தரும தீபிகை 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெற்ருரைப் பேணல் 47

தம்மைப் பெற்றெடுத்த மாதா பிதாக்களைப் பிள்ளைகள் பேணிவரவேண்டும் என்று முன்னர்க் கூறினர்; இதில் தாமே நல் லவாய் அவர் ஒழுகி வரவேண்டும் என்கின்ருர்.

தம் புதல்வர்கள் அறநெறி நடந்து புகழ் புரிந்துவரின் அவ் வரவு இருமுதுகு வர்க்கும் பெருகலமாய்ப் பெருகி எழுமையும் இன்பம் தரும் ஆகலான் அவர் உளம் மகிழ்வாராயினர். எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். (குறள் 62) என்றமையால் குணநலங்களுடைய பிள்ளைகளைப் பெற்ற வர்கட்கு உளவாம் இன்பமும் பெருமையும் இனித அறியலாகும். உணவும் உடையும் உதவிப் பெற்ருோைப் பேணி வருதல் மட்டும் போதாது ; பிறந்த பிள்ளைகள் சிறந்த ஒழுக்கமுடைய ாய் உயர்ந்துகொள்ளவேண்டும் , அங்ங்னம் உயரின் அவர் துயா மெல்லாம் நீங்கி உள்ளம் களித்து உயிர்பூரித்து கிற்பர்என்பதாம்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனேச்

சான்ருேன் எனக்கேட்ட தாய். (குறள்) சான்ருேர் என்கை ஈன்ருேட்கு அழகு. (ஒவையார்)

பிறந்த மக்கள் பெருக்ககையாாயின் பெற்றவளுக்குப் பேரு வகையாம் என இவை உணர்த்தி கிற்றல் அறிக.

47. மக்கள் எனவுலகில் மாண்பமையப் பெற்றவரைத்

தக்க வகையாகத் தாம்பேணுர்-துக்கமிகு - குட்டிகுஞ்சி என்னக் கொடுவிலங்கின் பாலிழித்து பட்டி யுழல்வர் பரிந்து. (எ)

இ-ள். இவ்வுலகில் உயர்ந்த மக்கள் எனச் சிறந்த மதிப்பு அமையப் பெற்றருளியவரைத் தகுதியாகப் பேணுதுவிடின் அவர் பின் இழித்த விலங்குகளிடமும், பறவைகள் வயிற்றிலும் பிறந்து பரிந்து உழலுவர் என்றவாறு.

மிருகம் பறவை முதலிய பலவகைப் பிற விகளிலும் மனிதப் பிறப்பே மிகவும் உயர்ந்தது ; அப் பிறப்பில் தோன்றிய பிள்ளை களுக்கே மக்கள் என்னும் சிறப்புப் பெயர் உண்டு , இங்கனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/54&oldid=1324622" இலிருந்து மீள்விக்கப்பட்டது