பக்கம்:தரும தீபிகை 1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தரும தி பி கை

சிறந்த கிலையில் உயர்ந்து கிகழ உரிமையுடன் உவந்து பெற்று விட்டவர் தாய் தந்தையரே. அத்தகைய பேருபகாரிகளை நன்றி யறிவோடு பணிந்து போற்றி நாளும் நன்கு ஆதரித்து வர வேண்டும் ; வாாதொழியின் நன்றி கொன்ற பாதகராய் நைந்து இழிந்து பன்றி முதலிய ஈனப் பிறவிகளில் உழன்று திரிவர் என்பதாம்.

குட்டி என்றது மிருகப் பிறப்பைக் குறித்தது. குஞ்சி பறவை யினம் சார்ந்தது. உயர்வான மனிதப் பிறவியில் மக் கள் என்ற மதிப்புரிமை கந்த தாய் தந்தையரை மதியாது கின் மவர் பின்பு பன்றிக்குட்டி, கழுதைக்குட்டி, நாய்க்குட்டி என இழிந்து தொலைவர் என்க.

பட்டி =ஆடுமாடுகள் அடைந்து கிடக்கும் இடம்.

பிள்ளை எனப் பிறந்தவன் பெற்றவயைப் பேணுவழிக் குட்டி குஞ்சிகளாய் ஒட்டி உழன்று ஒழிவான் என்ற கல்ை அதன் பழி பாவமும் இழிதுயரும் தெளிவாம்.

48. பிள்ளையெனப் பெற்றுப் பெருமைசெய்து விட்டவரை

உள்ள நாள் எல்லாம் உரிமையா-உள்ளம் உருகி வணங்கி உதவி புரியார் அருகி இழிவர் அளறு. )ہےy(

இ-ள். உள்ள நாள் என்றது வாழ்நாள் முழுவதும் என்றவாறு. உரிமையுடன் பெற்றுப் பெருமை மிகச் செய்து பேணியருளிய தாய் தந்தையரை என்றும் உருகி வணங்கி உபசரித்துவரும் பிள்ளைகள் உயர்நிலை யடைவர் ; அல்லாதார் பழி பாவங்களை யுடையாய் அழிவார் என்பதாம்.

தனக்கு இனிய பலன்கள் தரும் என்று கருதி ஒர் உழவன் நல்ல கனிமாங்களே வைத்துப் பக்குவமாகப் பாதுகாத்து வளர் ர்த்து வந்தான் ; அவை வளர்ந்தன ; கவையும் கொம்புகளுமாய்ப் பெருகி கின்றனவேயன்றி ஒரு பலனும் காவில்லை ; இனிய கனி கள் அருளும் என நாளும் எதிர்பார்த்து கின்ற அவன் உள்ளம் கடுத்து அவற்றை எப்படி எள்ளி விடுவானே அப்படியே ஈன்ற வர்க்கு உதவாப் பிள்ளைகள் எள்ளப்பட்டு இழிவாய் ஒழிவார்

என்க. பெற்ருோைப் பேணுமை பேரிழவாம் என்றபடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/55&oldid=1324623" இலிருந்து மீள்விக்கப்பட்டது