பக்கம்:தரும தீபிகை 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தரும தீபிகை

கிழவற்கு இளம்பெண் கிழமை பழங்கண்' என வந்தது.

கிழமை= உரிமை. பழங்கண் = துன்பம்.

சிறந்த கல்வியறிவும், திருந்திய ஒழுக்கமும் பொருக்கி, பெருந்தகைமையுடன் ஒத்த பருவம் ஒத்த அறிவு ஒத்த அன்பு ஒத்த பண்புடைய உத்தமியை மணந்துகொண்டு ஆண்மகன்

இல்லற வாழ்க்கையை இனிது நடக்கவேண்டும் என்பது கருத்து.

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

60. மலர்மணம் என்ன மருவி இனிய

குலமனை யோடு குலாவிப்-பலகலங்கள் பேணி யொழுகும் பெருமகனே பேரின்டம் காணியாக் காண்பன் கனிங்து. (ώ)

இ-ள் மலரும் மணமும்போல் இனிய மனைவியுடன் இனித மருவி, அறம் புகழ் முதலிய உயர்கலங்கள் பல புரிந்து, இல்வாழ்க்கை யில் நெறிவழுவாது ஒழுகும் கலைமகன் பேரின்ப நிலைமையை உரிமையாக் கண்டு உவந்து கிற்பன் என்பதாம்.

இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் கூறிய படி யிது. குலமனை = குணநலங்களால் சிறந்த மனைவி. குலாவல், உவகையோடு கூடி உல்லாசமாய் வாழ்தல். மலர் மணம் என்றது சேர்க்கை கலம் கருதி வந்தது. கணவனும் மனைவியும் உழுவலன்புடன் உள்ளங்கலங்து ஒழுகின் புகழும் புண்ணியமும் பொலிந்து திகழும் ; உலகமும் அவரை உவருதுபோற்றும் ; இம்மையிலும் மறுமையிலும் அவர் இன்பமிகப் பெறுவர். இங்ங்னம் அன்டமைந்த வாழ்க்கைக்கு ஆருயிர் நிலையமாய்ச் சீரமைந்துள்ள பேருரிமையைப் பேணிக் கொள்க என்பதாம்.

மலர்க்கு மனம்போல் கணவனுக்கு மனைவி மாண்பமைந்து உள்ளாள். அக்குணவதி இலளேல் மணம் இல் மலர்போல் அவன் மதிப்பிழந்த கிற்பன். அந்நிலைமையை கினைந்துணர்க.

திருமணம் என்பது கலியான க்கைக் குறித்து வருகின்றது. அப்பெயர்க்குப் பொருள் அழகிய சேர்க்கை என்பதாம். பருவ நலம் கனிந்த இருவர் மருவி மகிழும் கூட்டத்தை உரிமையுடன் உணர்த்தி கிற்றலால் இவ்வாறு மேலோர் அதனே வழங்கி வா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/69&oldid=1324638" இலிருந்து மீள்விக்கப்பட்டது