பக்கம்:தரும தீபிகை 1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாவது அதிகாரம்

மக்கட் பேறு.

இது, பிள்ளைகளுடைய பெருமையைக் குறித்துக் கூறுகின் றது. கணவனும் மனைவியும் கலந்து மகிழ்ந்து இல்வாழ்க்கை புரிந்து வருங்கால் அதன் கலைமையான சிறந்த பயனுய் முதலில் விளைந்து எழுவது குழந்தைகளே. ஆதலால் மனைமாட்சியை அடுத்து மக்கட்பேறு வைக்கப்பட்டது.

61. மக்கட் பிறப்பை வழிவழியா மாண்புறுத்திப்

பக்கம் அழிந்து படாவகைகின்-ருெக்கவே ஒம்பி வரலால் உறுமகார் மக்களென

ஏம்பி இருந்தார் இசைந்து. * (க)

இ-ள்

உலகில் மக்கள் என விளங்கி கிற்கும் குழுவினர் வழிவழியே தொடர்ந்து வளர்ந்து வாக் கிளர்ந்து வருதலால் பிறந்த பிள்ளை கள் மக்கள் என்னும் அச்சிறந்த பெயரை அடைந்து கின்றனர் என்பதாம்.

குழங்கைகளை மக்கள் என்று வழங்கி வருகற்குத் தகுந்த காரணம் காட்டிய படியிது.

மகார்=பிள்ளைகள். எம்புதல் = உறுதித்துணையாய் உதவுதல். இம்மண்ணுலகில் எண்ணிடலரியபடி பலவகை உயிரினங் கள் பாவியுள்ளன. அவ்வெல்லாவற்றுள்ளும் மனிதர் சிறந்த பிறப்பினாய் உயர்ந்து விளங்கு கின்றனர். அவர் யாண்டும் மக்கள் என வழங்கப்பட்டு வருகின்றனர்.

மாவும் மாக்களும் ஐயறி வினவே மக்கள் தாமே ஆறறி உயிரே. (தொல்காப்பியம்) என ஆசிரியர் தொல்காப்பியனர் இவரை அறிவு கிலையில் தலை சிறந்தவாகக் குறித்திருக்கிரு.ர்.

இங்ங்னம் உலகில் உயர்ந்த மக்கள் வகுப்பு என்றும் குன்ரு மல் மேலும் மேலும் பெருகி வருவதற்குக் காரணம் பிறந்து வரும் பிள்ளைகளேயாம் ; பிள்ளைப்பேறு இல்லையாயின், மக்கட் கூட்டம் ஒக்கத் தேய்ந்து உருவற மாய்ந்துபோம். அங்கனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/71&oldid=1324640" இலிருந்து மீள்விக்கப்பட்டது