பக்கம்:தரும தீபிகை 1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 67

ரும் இகழ்ந்து கூறுவர் ; அதுவுமன்றி வழிமுறையே வந்து கோல் தாங்கும் குலமகன் இன்மையால் குடி குலைந்துபோம் ஆதலால்,

அவன் வாழ்வு புலிந்து புன்சொல் அடையும் ' என்ருர்.

பூமண்டல முழுவதும் உடையாயிருந்தும் ஒரு புதல்வன் இல்லாமையை கினைந்து எத்தனை அரசர்கள் மறுகிப் புலம்பி அரிய வேள்விகள் ஆற்றி அலமந்துள்ளனர் தசரதன் முகலாயிைேர் சரிதங்களெல்லாம் இங்கே சிந்தனேக்கு உரியன.

படைப்புப் பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெரும் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு கடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களே இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே. (புறம், 188) உங்து ர்ேக்கடல் உடுத்தபார் முழுவதும் ஒருங்கே வந்து தாள்தொழும் அரசியல் வளமெலாம் பெறினும் இந்திராதியர் பெரும்பதத் திருக்கை எய்திடினும் மைந்தர் இன்றியே வாழ்வது வாழ்வுமற் றன்றே. '

(பிரமோத்தர காண்டம்) பொன்னுடைய ரேனும் பொருளுடைய ரேனுமற் றென்னுடைய ரேனும் உடையரோ-இன்னடிசில் புக்களையும் தாமரைக்கைப் பூகாறும் செய்யவாய் மக்களேயிங் கில்லாதவர். (நளவெண்பா) மக்கட்பேறு எத்தனை மாட்சியுடையது என்பது இவற்ருல் அறியலாகும். பிள்ளைகளே பெரும்பாக்கியங்கள் என்பது கருத்து.

64. மனிதன் குடிவாழ்வை மாட்சி யுறுத்தி

இனிது முயல இசைத்துக்-கனிவுமிகச் செய்வதெலாம் சேயின் செயலால் குடிக்கென்றும் உய்தி யவனே யுணர். (*)

இ-ள். H ஒரு மனிதனது குடிவாழ்க்கையை மாட்சிமைப் படுத்தி அவனைப் பலவகையிலும் முயற்சியில் ஊக்கியருள்வது பு:கல்வனே ஆதலால் அக்குடிக்கு அவனே உயிரா காாம் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/74&oldid=1324643" இலிருந்து மீள்விக்கப்பட்டது