பக்கம்:தரும தீபிகை 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தரும பிேகை

குடி விளக்கத்திற்கு மலையை உவமை கூறியது என்றும் கிலை கிரியாது நிலவி கிற்கும் அகன் தலைமை நோக்கி குன்று=மலை. படியில் பிறந்த மகன் கலைகள் பல பயின்று, மானம் பேணிச் சீலமுடையய்ை ஞான நெறியில் நடந்து, தனது குடி மாபு தலைமை யுறும்படி தழைத்து கிற்கவேண்டும் என்பது குறிப்பு.

8ே. குடிதழைக்க வங்த குலமகனும் இந்தப்

படிதழைக்க வங்த பதியும்-முடிதழைக்க வந்த மணிபோல் வரிசை மிகப்பெற்று முந்த வுயரு முதல். )ہے(

இ-ள் குடி கழைத்து விளங்கத் தோன்றிய புதல்வனும், இவ் வுலகம் செழித்து விளங்க வந்த அரசனும் சிறந்த புகழடைந்து முடிமணி போல் உயர்ந்து விளங்குவர் என்றவாறு.

இது, குடிக்கும் படிக்கும் குலமுதல் கூறுகின்றது. பதி=அரசன். முடி=கிரீடம். தழைத்தல் =செழித்து விளங்குதல். குடி.யை வளமுறச்செய்து உயர் கிலையில் கிறுத்து பவன் உத்தம புத்திரய்ை ஒளிபெற்று கிம்பன் ; படியை நல முறப் பாதுகாத்தருளும் அரசன் எல்லாாாலும் காத்தற் கடவுளா எத்தப்படுவன் ஆதலால் இருவரும் ஈண்டு இணைத்துப் போற்ற வந்தார். கரும கருத்தாக்களின் உரிமை கருதி யுனா உற்றது.

குடியாளும் குலமகனைப் படியாளும் அரசனேடு ஒப்ப வைத்தது முடி ஆட்சி போல் குடி ஆட்சியும் அரிய பல குண மாட்சிகளை யுடையது என்பது தெளிய என்க.

மடியின்றி முயன்று மதியூன்றிப் பேணின லன்றிக் குடித் கனமும் துாைக்கனமும் செழித்து விளங்கா. குளமும் கட அம் போலச் சுருக்கமும், பெருக்கமும் உடையனவாயினும் இரு வகை கிலைகளிலும் தலைமையாளர் ஒரு முகமான நிலைமையாளரே யாவர். பிறப்புரிமையைச் சிறப்புறச் செய்யவேண்டும் என்பதாம்.

கோல் உயரக் கோன் உயரும்

குடி உயரக் கோல் உயரும், என்றமையால் குடிமகனுக்கும் கோமகனுக்கும் உள்ள உறவுரிமை

உனாலாகும். ஆள்வினைகளின் அமைதி கூறிய படியிது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/79&oldid=1324648" இலிருந்து மீள்விக்கப்பட்டது