பக்கம்:தரும தீபிகை 1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ம க் க ட் பே அறு 73

முடிமணி போல் உயரும் என்றது குடியும் படியும் நலமுறச் செய்த இவர் புகழ்மிகப்பெற்று உலகம் போற்ற உயர்ந்து விளங் குவர் ஆதலால் அவ்வுயர் நிலை தெளிவாக உணர வக்கது.

69. பெற்ருரைப் போற்றிப் பிறந்த குடிபேணி

உற்ருரை ஒம்பி உறுமகனே-வற்ருத ஆழி எழுங்த அமிர்தாவான் அல்லாதான் பாழில் எழுங்த பழி. (க)

இ-ள் தன்னைப் பெற்ற மாதா பிதாக்களை வணங்கிப் போற்றி, உற்ற குடியை உயரச்செய்து, சுற்றத்தாசை ஆதரித்தருள்பவன் அமிர்தம் போல் இனியனுவன் ; அல்லாதவன் வினே இழிந்து ஒழிவன் என்பதாம்.

ஆழி என்றது. பாற்கடலை, குடிக்கு ஆழியும், மகனுக்கு அமிர்தமும் உவமைகளாகித் தகைமைகளை விளக்கின.

குணநலமுடைய குலமகன் எல்லார்க்கும் இனியய்ை இன் பம் மிகச் செய்வன் ஆதலால் அவன் அமிர்தம் என கின்ரு ன்.

அல்லா கான் என்றது பெற்ருசைப் போற்ருமல், பிறந்த குடியைப் பேணுமல், உற்ருரை ஒம்பாமல் ஊனம் உற்றுள்ள ஈன மகனை. பாழ்-விண். அவன் பிறப்பு பயன் அற்றது என்பதாம்.

சிறந்த பிறவியை அடைந்தும் உரிய கடமைகளைச் செய்யா மையால் அவனுடைய தோற்றம் இங்கனம் தாற்றப் பட்டது.

70. வீழமைந்த ஆல்போல் விறல்மகனேப் பெற்றகுடி

ஊழமைங் தோங்கி உயருமால்-கூழைவீழ் பெற்ற மரம்போலப் பேதைமகன் உற்றகுடி பற்றற் றழியும் பரிந்து. (ιδ) இ~ள் நல்ல ஆண் மகனேப் பெற்ற குடி விழுது படிந்த ஆலமரம் போல் கழைத்துச் செழித்து நிலைத்து விளங்கும்; பேதை மகனைப் பயங்க குடி கூழை விழ் உடையது போல் காழ்வடைந்து விழும் என்பதாம். வாழ்வும் வீழ்வும் வருமூலம் குறித்தது.

10

டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/80&oldid=1324649" இலிருந்து மீள்விக்கப்பட்டது