பக்கம்:தரும தீபிகை 1.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அ. மு. கு 79

74. காட்சியுறுங் தோறும் கருத்தில் களிமிகுத்

த்ாட்சி புரியும் அழகுதான்-மாட்சியுறு தெய்வ அம்சம் சிறிதேனும் இல்லையெனின் எய்த வருவ கிலே. - (#)

இ-ள்

கண் எதிாே கானும் பொழுதெல்லாம் உள்ளத்தில் உவ கையை விளைத்து அருள் கின்ற அழகை அரிய தெய்வத் திருவரு ளால் அன்றி யாரும் எளிதில் பெறமுடியாது என்றவாறு.

அழகின் இயல்பும் இசைவும் கூறிய படி யிது.

கண்டவர் எவர்க்கும் களிப்பை விளைத்து அவரை க் தன் வசப்படுத்தித் தலைவணங்கச் செய்யும் ஆதலால் ஆட்சி புரியும் அழகு ' என அதன் மாட்சி தோன்ற வந்தது.

புறத்தே விழிகாண அகத்தே களி காணும் என்றமையான் அழகுக் காட்சியின் அதிசய நிலை காணலாகும்.

மனிதப் பாப்பில் கன்னே ஒரு தனியான இனிய பிறப் பாக்கி யாண்டும் சிறப்புறச் செய்து என்றும் உயர்ச்சி யருளும் எழிலை எவனும் எளிதில் எய்த இயலாது; அரிய கவப் பேம்ருல், பெரிய ஒரு தெய்வக் கொடையாய் அது மருவி வரும் என்க.

அழகு எங்கே அதிகமாய்க் காணப் படுகின்றதோ அங்கே ஒரு தெய்வக் கன்மை உள்ளது என ஊகம் செய்து கொள்ளுக. உருவ அழகு தெய்வ சம்பத்து ; அருமைப் பேருய் அமைவது : அதனைப் புனிதமாகப் போற்றி இனிமை ஏற்றுக என்பதாம்.

75. நல்லார் இருவர் தயக்கும் அமுகமைந்து

பல்லாரும் போற்றும் படிபடிங்து-எல்லாரும் கண்டு மகிழ்கின்ற காமருருக் கொண்டிருத்தல் பண்டு புரிந்த பயன். (டு)

இ-ள் * = நல்ல குணசீலர் நயந்து மொழியும் அழகு அமைந்து, பலரும் போற்றும் படி நடந்து, எல்லாரும் மகிழுமாறு இனிய உருவம் எய்தி யிருப்பது முன்னம் செய்த புண்ணியப் பயனே யாம் என்றவாறு. காமர்=அழகு உரு=வடிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/86&oldid=1324655" இலிருந்து மீள்விக்கப்பட்டது