பக்கம்:தரும தீபிகை 1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 த ரு ம தீ பி. கை

78. உருவகலன் எல்லாம் ஒருங்கே அமைந்து

பருவ அழகு படினும்-மருவும் குணத்தமு கின்றேல் குவிந்த அழ கெல்லாம் பிணத்தழ காகும் பிறழ்ந்து. (அ)

இ-ள் அங்க அமைப்புகள் யாவும் நன்கு அமைந்து, சிறந்த அழகு ஒருங்கே கிறைந்திருப்பினும் நல்ல குணங்கள் இல்லையானுல் அவ் வழகுகளெல்லாம் இழிவாக இகழ்ந்து தள்ளப்படும் என்றவாறு.

இது உயிர் அழகின் உயர்வு கூறுகின்றது. உருவ நலன் என்றது முகம் கண் மூக்கு காது வாய் கழுத்து கை கால் தோள் முதலிய அவயவங்கள் இனிதமைங் திருக்கும் நலங்களே.

பருவ அழகு=இளமை கலம் சுரங்க விழுமிய எழில். படினும்=பொருக்கி யிருப்பினும்.

குணம் என்றது உள்ளப் பண்புகளை. அருள் ஈகை அறிவு சிலம் வாய்மை முதலிய இனிய ர்ேமைகள் இங்கே குணம் என வந்தன. இக்குணங்கள் உயிரினங்களை மகிமைப்படுத்திப் பேரழகு செய்து வருகலின் குணத்தழகு என நேர்க்கது. .

மலர்க்கு மனம்போல் குணம் உயிர்க்கு மனமாய் ஒளி சாந்து மிளிர்கின்றது. உயர்ந்த குண நலம் இலனேல் மனிதன் மனம் இல்லாத மலாய் இழிந்து படுகின்ருன்.

“Beauty without grace is the hook without the bait. ”

' உள்ளப் பண்பில்லாக அழகு இாையற்ற தாண்டில் முள் போல் வறிதே இழிந்து படுகின்றது ' என எமர்சன் என்னும் அமெரிக்கப் பெரும் புலவர் கூறியுள்ளார்.

புறத்தோற்றம் எவ்வளவு சிறந்திருக்காலும் அகத்தே நல்ல இயல்பு இல்லை ஆயின் உலகம் ,கனே மதியாது ; ஆகவே அது மதிப்பிழந்து படும் என்க.

' குணத்தழகு இன்றேல் குவிந்த அழகு எல்லாம்

பிணத்தழகு ஆகும் '

என்றது. அது செத்த அழகு என உய்த்துணர வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/91&oldid=1324660" இலிருந்து மீள்விக்கப்பட்டது