பக்கம்:தரும தீபிகை 1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அ ழ கு 85

குணம் உயிரின் மணமாய் ஒளிர்கின்றது ; அழகு உடலில் இனிதாய் மிளிர்கின்றது. குணம் இல்லையேல் உயிர் அற்ற உடல்போல் அழகு பழியுற்று இழியும் என்க.

உள்ளே குண நலம் இல்லாத மனிதன் வெளியே ஒர் அழகய்ைத் தலைநீட்டி வருவது உயிர் நீங்கிய சவத்தை மோட்டி அலங்கரித்து வைத்தது போல்வதோர் பாராட்டாம் என்றபடி.

அரிய குண நலங்கள் மருவிய பொழுதுதான் உயிர் பெற்ற உடலாய் அழகு ஒளிபெற்று விளங்கும் என்க. இனிய நீர்மையே புனித அழகு என்பது கருத்து.

f

79. மேனி மினுக்காய் வெளிப்பகட்டாய் மேவிவரல் ஆனஅழ கெல்லாம் அழகல்ல-ஞானஒளி தோய்ந்து கருணை சுரங்து தனதுயிரை ஆய்ந்து வருதல் அழகு. (க)

இ-ள் உடல்களை மினுக்கி ஆாவாாமா அலங்கரித்து வெளி வருவன அழகுகள் ஆகா ; உணர்வு சுரங் த அருள் நலம் கனிந்து தனது ஆன்ம நிலையை ஆராய்ந்து வருவதே மனிதனுக்கு இனிய அழகு

எனற வாறு.

உண்மையான அழகின் தன்மை உாைத்த படியிது. மேனி மினுக்கல் என்றது பட்டு உடை வனைதல், மணியணி புனேகல், திலகம் தீட்டல், சவ்வாது தோய்தல், சக்கனம் பூசல், வாசனைத் தைலம் தடவிச் சிப்பிட்டுத் தலை வாரிச் சிங்காளித்தல் முதலிய அலங்காாங்களே.

வெளிப்பகட்டு என்றது கலை எடுப்பாக கிமிர்ந்து கடந்தும் வாகன முதலியன ஊர்ந்தும் எதிரே கண்டவரெ வரும் வியந்து கொண்டாடும்படி கோப்பும் கோலமும் காட்டி வருவது.

கண் மயக்கான இந்த ஆடம்பரங்களெல்லாம் செயற்கை அழகுகள் எனப்படும். செயல் வகையால் நேர்ந்தன செயற்கை

5T557 35 -

அவயவ அமைதியும் சமுதாய சோபையும் இயல்பாக

வாய்ந்த இனிய உருவப் பொலிவு இயற்கை அழகாம். முன்னதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/92&oldid=1324661" இலிருந்து மீள்விக்கப்பட்டது