பக்கம்:தரும தீபிகை 1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 த ரு ம தி பி கை

அழகிய எண்ணங்களும் செயல்களும் விழுமிய பலன்களை உதவி வியக்ககு மேன்மைகளை விளைக் கருளும் ஆதலால் உள்ளும் புறனும் புனிகய்ை மனிதன் ஒழுகி வர வேண்டும் என்றவாறு. மகத்துவங்கள் என்றது உலகம் வியந்துபோற்றத் தக்க அற்புத நலங்களை .

எவரும் விழைந்து நோக்கி மகிழ்ந்து வருதலால் இனிய செயல்கள் இங்கே அழகு என வந்தன.

“Handsome is that handsome does (Goldsmith).

  • அழகிய செயல்களே அழகாம் ' என மேல்நாட்டுப்

புலவரும் கூறியுள்ளன 斤。

உருவ அழகோடு உள்ளமும் அழகய்ை நல்வினைகள் புரிந்து வரின் யாவரும் விழையும் .ே யெழிலாளனுய் மனிதன் பேரின் ப

நலனைப் பெறுவான் என்பதாம்.

மனிகப் பிறவி மிகவும் சிறந்தது ; அருமையும் பெருமையும் உடையது ; எளிதில் எய்த முடியாதது ; இத்தகைய அழகிய பிறப்பை அடைந்துள்ள நீ அவல வினைகள் புரிந்து அவலட்சண மாய் அழிந்து போகாமல் அகமும் புறமும் புனிதனய் மனித வுலகம் மகிழ இனிது உயர்க என்பது கருத்து.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

.G அரும்பெறலான பெரும் பாக்கியம்ط9لاقے அதனை புடையவனே எவரும் மகிழ்வர். உலகம் அவன் வசமாய் உரிமை புரியும். அழகு எளிதில் அமையாது. புண்ணியப் பயனுய் அது பொருந்தி வருகின்றது. அழகும் குணமும் அரசும் அரியன. முருகன்போல் அழகு தெய்வக் திருவாயுள்ளது. உருவ அழகு குண அழகால் உயர்கின்றது. மேன்மையான அழகு ஆன்ம ஞானமே. அந்த விழுமிய அழகு எழுமையும் இன்பமாம்.

அ-வது அழகு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/95&oldid=1324665" இலிருந்து மீள்விக்கப்பட்டது